இந்தியாவில் உருமாறிய வைரஸின் பெயர் ‘டெல்டா’ – WHO பரிந்துரை

WHO to use greek alphabets as labels for covid strains இது அறிவியல் சாராத பார்வையாளர்களால் விவாதிக்க எளிதாகவும் நடைமுறை ரீதியாகவும் இருக்கும்

WHO to use greek alphabets as labels for covid strains Tamil News
WHO to use greek alphabets as labels for covid strains Tamil News

WHO to use Greek alphabets as labels for covid strains Tamil News : SARS-CoV-2 வேரியன்ட் ஆஃப் இன்ட்ரெஸ்ட் (VOI) மற்றும் வேரியன்ட் ஆஃப் கன்செர்ன் (VOC) ஆகியவற்றிற்கான ‘உச்சரிக்க எளிதான’ மற்றும் ‘களங்கப்படுத்தாத’ வார்த்தை பயன்பாட்டினை கருத்தில் கொண்டு பல நாடுகள் முன்வந்த நிலையில், கடந்த திங்களன்று கிரேக்க எழுத்துக்களை பயன்படுத்தி இந்த இரண்டு வகை பிறழ்வுகளுக்கும் லேபிள் அமைக்கலாம் என்று WHO அறிவித்தது.

லண்டனில் (செப்டம்பர் 2020) ஆவணப்படுத்தப்பட்ட VOC B.1.1.7 மாதிரிகள் ஆல்ஃபா என்று அழைக்கப்படும் என்று WHO கூறியுள்ளது. மேலும், VOC B.1.351, தென்னாப்பிரிக்காவில் ஆரம்பத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மாதிரிகள் (மே 2020) பீட்டா என்றும் VOC P.1, பிரேசிலில் ஆரம்பத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மாதிரிகள் (நவம்பர் 2020) காமா என்றும் அழைக்கப்படும். மற்றும் B.1.617.2, இந்தியாவில் ஆரம்பத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மாதிரிகள் (அக்டோபர் 2020) டெல்டா என்று அழைக்கப்படும்.

GISAID, Nextstrain மற்றும் Pango-ஆல் SARS-CoV-2 மரபணு வம்சாவளிகளைப் பெயரிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் நிறுவப்பட்ட பெயரிடல் அமைப்புகள் “தற்போது அவை விஞ்ஞானிகளாலும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் பயன்பாட்டில் இருக்கும்” என்று WHO கூறியது.

“மாறுபாடுகள் பற்றிய பொது விவாதங்களுக்கு உதவுவதற்காக, WHO வைரஸ் பரிணாம செயற்குழு, WHO COVID-19 குறிப்பு ஆய்வக வலையமைப்பு, GISAID, Nextstrain, Pango ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் வைராலஜிக்கல், நுண்ணுயிர் பெயரிடுதல் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றில் கூடுதல் வல்லுநர்களை VOI மற்றும் VOC-க்காக எளிதில் உச்சரிக்கக்கூடிய மற்றும் களங்கப்படுத்தாத லேபிள்களை அமைக்க WHO அழைத்தது. தற்போது, ​​WHO-ஆல் அழைக்கப்பட்ட இந்த நிபுணர் குழு, ஆல்பா, பீட்டா, காமா உள்ளிட்ட கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது. இது அறிவியல் சாராத பார்வையாளர்களால் விவாதிக்க எளிதாகவும் நடைமுறை ரீதியாகவும் இருக்கும்” என்று WHO தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், மே 12 அன்று, WHO “இந்திய மாறுபாடு” என்ற வார்த்தையை B.1.617— VOC உடன் தொடர்புப்படுத்தவில்லை என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டது.

“உலக சுகாதார அமைப்பு (WHO) B.1.617-ஐ உலகளாவிய அக்கறையின் மாறுபாடாக வகைப்படுத்திய செய்தியைப் பல ஊடக அறிக்கைகள் உள்ளடக்கியுள்ளன. இந்த அறிக்கைகளில் சில கொரோனா வைரஸின் பி .1.617 மாறுபாட்டை ‘இந்திய மாறுபாடு’ என்று குறிப்பிட்டுள்ளன. இந்த ஊடக அறிக்கைகள் எந்த அடிப்படையும் இல்லாத, ஆதாரமற்றவை. WHO தனது 32 பக்க ஆவணத்தில் கொரோனா வைரஸின் B.1.617 மாறுபாட்டுடன் ‘இந்தியன் வேரியன்ட்’ என்ற வார்த்தையை தொடர்புப்படுத்தவில்லை என்பதை இது தெளிவுபடுத்துவதாகும். உண்மையில், இந்த விஷயத்தில் அதன் அறிக்கையில் “இந்தியன்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை” என MoHFW முன்பு கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Who to use greek alphabets as labels for covid strains tamil news

Next Story
மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்த்யோபத்யாய் ஒய்வு; மம்தாவிற்கு ஆலோசகராக நியமனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com