/tamil-ie/media/media_files/uploads/2023/03/anc.jpg)
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பெயர்களில் இயக்கிவரும் பள்ளியின் பெயர்களை மாற்றி மறுபெயரிட வேண்டும் என்ற உத்தரவுக்கு பல கிராம பள்ளிகள் ஒத்துழைப்பு கொடுத்தாலும் பாசிகர் பஸ்தி, பத்லா என்ற கிராமம் இதற்கு விதிவிலக்காக பள்ளியில் பெயரை மாற்ற கூடாது என்று கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் செயல்படுத்தி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளனர்.
பள்ளியின் நுழைவாயிலில் "அரசு ஆரம்ப ஸ்மார்ட் பள்ளி (ஜிபிஎஸ்), பாசிகர் பஸ்தி, பத்லா" என்று பலகை உள்ளது. புதிதாக வர்ணம் பூசப்பட்ட பலகையில் கண்ணுக்குத் தெரிவதை விட தெரியாத பல விஷயங்கள் உள்ளன: மாவட்டத் தலைமையகத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள லூதியானாவின் கன்னாவில் உள்ள பாசிகர் பஸ்தி பட்லா என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களது நிலைபாட்டை அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சி (AAP) அரசாங்கம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, "சமூகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லை என்பதை உறுதிசெய்யவும்" பாதுகாப்பிற்காகவும், ஜாதி அல்லது சமூகக் குறிப்புகளைக் கொண்ட 56 அரசு தொடக்கப் பள்ளிகளின் பெயர்களை மறுபெயரிடுமாறு உத்தரவு பிறப்பித்தது. "குழந்தைகளின் மென்மையான மனதில் இத்தகைய பெயர்களின் ஆழமான விளைவை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அனைத்து பள்ளிகளும் ஒத்துழைப்பு கொடுத்த நிலையில், பாசிகர் பஸ்தி பத்லாவில் உள்ள பள்ளி இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/image-170.png)
கிராம மக்கள் பள்ளியின் பெயரிலிருந்து "பசிகர்" என்பதை நீக்கி மறுபெயரிட மறுத்தது மட்டுமல்லாமல், அசல் பெயரைத் தக்கவைக்க விரும்புவதாகக் கூறி பஞ்சாயத்து நிறைவேற்றிய தீர்மானத்தையும் மாநில கல்வித் துறையிடம் சமர்ப்பித்தனர். மேலும் பசிகர் என்ற இந்த பெயர் அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் இதை பயன்படுத்த தாங்கள் வெட்கப்படுவதில்லை" என்றும், தங்கள் அண்டை கிராமமான உயர் சாதியினருடன் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக நடந்து வரும் சட்டப் போராட்டத்தை நினைவூட்டுவதாகவும் உள்ளது என்று கிராமவாசிகள் கூறுகிறார்கள்.
லூதியானா மாவட்டத்தின் கன்னா பிளாக்கில் உள்ள பள்ளி, ப்ரீ-பிரைமரி முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி பஞ்சாபில் அறிவிக்கப்பட்ட பட்டியல் சாதி (SC) சமூகமான பாசிகர்களின் பஸ்தியில் (குடியேற்றம்) செயல்படுகிறது, அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் பிரிவினையில் குடியேறியவர்களின் சந்ததியினர். 1,200 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த கிராமம் 2008 வரை பட்லாவின் ஒரு பகுதியாக இருந்தது, அதன் பஞ்சாயத்தில் உயர் சாதி ஜாட் சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
பாசிகர் பஸ்தியின் கிராமவாசிகள் கிராமப்புற கண்காட்சிகளில் பாரம்பரிய பாசி (அக்ரோபாட்டிக்ஸ்) செய்து வாழ்வாதாரம் செய்கிறார்கள் அல்லது ராக் பிக்கர்ஸ், ஸ்கிராப் விற்பவர்கள் மற்றும் கையால் வேலை செய்பவர்களாக உள்ளனர். பாசிகர் பஸ்தியில் வசிப்பவர்கள், பத்லாவின் ஒரு பகுதியாக, தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும்"பெரும்பாலான நிதி உயர்சாதிப் பகுதிகளுக்குச் செலவிடப்படும், யாரும் பாசிகர் பஸ்தியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை" என்று 40 வயதான ஷாம்லால் கூறுகிறார், அவரது மனைவி பரம்ஜித் கவுர் கிராமத்தின் சர்பஞ்ச் ஆவார்.
இதனிடையே பள்ளியின் பெயரைத் தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம், பக்கத்திலுள்ள பத்லா கிராமத்துடன் நடந்து வரும் சட்டப்போராட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல், பத்லா கிராமத்தின் ஷாம்லட் நிலத்தில் (பஞ்சாயத்துக்குச் சொந்தமான கிராமத்தில் உள்ள பொதுவான நிலம்) மூன்றில் ஒரு பகுதி தங்ளுக்கு சொந்தமானது என்ற பாசிகர் பஸ்தியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஷாம்லட் நிலம் முக்கியமாக சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாப் கிராம பொது நிலம் (ஒழுங்குமுறை) விதிகள், 1964 இன் விதி 6, "குத்தகைக்கு எடுக்க முன்மொழியப்பட்ட சாகுபடி நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு, பட்டியல் சாதியினருக்கு மட்டுமே ஒதுக்கப்படும்" என்று கூறுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/image-171.png)
ஷாம்லால் நிலம் இல்லாததால், தங்கள் பஞ்சாயத்துக்கு வருமானம் இல்லை "மற்ற எல்லா கிராமங்களைப் போலவும் பொதுவான நிலத்தை வைத்திருப்பது எங்கள் உரிமை" என்று அவர்கள் கூறி வருகின்றனர். உயர் நீதிமன்றத்தில் பாசிகர் பஸ்தி கிராமவாசிகளின் வழக்கறிஞர் ஃபரியாத் சிங் விர்க், “2008 இல் பஞ்சாயத்துகள் பிரிக்கப்பட்ட பிறகு, பாசிகர் பஸ்தி பத்லா கிராம மக்கள் ஒவ்வொரு கிராமத்தின் உரிமையான பொதுவான நிலத்தில் தங்கள் பங்கைப் பெறவில்லை. தற்போது வீடு கட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்கள் கூட அவர்கள் இல்லை. அவர்களின் உரிமைகளுக்காக நாங்கள் சட்டரீதியாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
அதேபோல் தங்கள் பஞ்சாயத்துகள் பிரிக்கப்பட்டதன் மூலம், நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் கிராமத்திற்கு வருமானம் ஈட்டவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தப் பங்கு தேவை. சொந்த பஞ்சாயத்து கிடைத்த பிறகுதான் ஓரளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போது எங்களுக்குச் சொந்தமாக அங்கன்வாடி, சமுதாயக்கூடம் மற்றும் இந்த ஆரம்பப் பள்ளி உள்ளது, ஆனால் நாங்கள் இன்னும் எங்கள் பக்கத்து ஊர்க்காரர்களின் தயவில் தான் இருக்கிறோம் - அவர்கள் எங்களுக்கு தண்ணீர் தொட்டிக்கு நிலம் கொடுக்கவில்லை.
ஒவ்வொரு சிறிய வளர்ச்சிப் பணிகளுக்கும் அரசை நம்பி இருக்க முடியாது. முன்னதாக, நாங்கள் பத்லாவின் ஒரு பகுதியாக இருந்தபோது, சிங்கப் பங்கு நிதி உயர்சாதி பகுதிகளுக்குச் சென்றது, பாசிகர் பஸ்தியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்தப் பள்ளியின் பெயரை மாற்றினால், எங்கள் சமூகத்தின் மீதான உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்பதால், இந்தப் பள்ளியை விட்டுவிட முடியாது. அதனால்தான் கிராம மக்கள் பள்ளியையும் அதன் பெயரையும் தங்கள் இதயத்தில் வைத்திருக்கிறார்கள் என்று ஷாம்லட் மேலும் கூறியுள்ளார்.
“இந்தப் பள்ளி 1960களில் இருந்து இயங்கி வருகிறது, ஆனால் 2000 வரை சொந்தக் கட்டிடம் இருந்ததில்லை. இது அருகிலுள்ள தர்மசாலாவில் <சமூக மையம்> இருந்து இயங்கி வந்தது. பல தசாப்தங்களாக, எங்கள் குழந்தைகள் கட்டிடம் இல்லாத பள்ளியில் படித்தனர். 2000-ம் ஆண்டுதான், பத்லா கிராமப் பஞ்சாயத்திடம் எங்களின் உரிமைக்காக மன்றாடிக் கொண்டே இருந்தபோது இந்த கட்டிடம் வந்தது. 2008ல் ஊராட்சிகள் பிரிக்கப்பட்ட பிறகும் எங்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கவில்லை. இன்றுவரை, எங்கள் கிராமத்தில் அரசு மருந்தகமோ அல்லது சுகாதார மையமோ அல்லது 5 ஆம் வகுப்புக்குப் பிறகு குழந்தைகளுக்கான பள்ளியோ இல்லை. பள்ளியின் பெயர் மாற்றப்பட்டால் எங்கள் சட்டப் போராட்டம் நீர்த்துப் போவதை நாங்கள் விரும்பவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/image-172.png)
மேலும், எங்களை பாசிகர்கள் என்று அழைப்பதில் நாங்களோ அல்லது எங்கள் குழந்தைகளோ வெட்கப்படுவதில்லை. இது எங்களது அடையாளம், பெருமை., எங்கள் சட்டப் போராட்டம் முடிந்ததும் பள்ளியின் பெயரை மாற்றினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ”என்று ஒரு சமூக பெரியவரும் முன்னாள் சர்பஞ்சும்.70 வயதான இந்தர்பால் சிங், கூறியுள்ளார்.
"பாசிகர் பெயர் கைவிடப்பட்டால், அது 'அரசு ஆரம்ப ஸ்மார்ட் பள்ளி (ஜிபிஎஸ்), பட்லா' என்று அழைக்கப்படும். அதன் மூலம், எங்கள் சமூகத்தின் உரிமையை நாங்கள் இழந்துவிடுவோம். இந்தப் பள்ளி எங்கள் பிள்ளைகளுக்குச் சொந்தமானது இல்லை, பக்கத்து கிராமத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று கூட அவர்கள் கூறலாம். இந்தப் பள்ளிதான் எங்கள் பிள்ளைகளின் கல்விக்கான ஒரே வழி. இங்கு வசிக்கும் குடும்பங்கள் நிலமற்றவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உடலுழைப்பு மற்றும் குப்பை விற்பனையை நம்பியுள்ளனர். எந்த குடும்பமும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முடியாது என்று ஷாம்லா மேலும் கூறியுள்ளார்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஷ் குப்தா கூறுகையில், பள்ளியின் பெயரை ஏன் மாற்ற விரும்பவில்லை என்பதை விளக்கி பஞ்சாயத்து கல்வித்துறைக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் அளித்துள்ளது. “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, நான் சேர்ந்தபோது, பள்ளிக்கூடத்தில் மதிய உணவு அல்லது கழிப்பறை, சமைக்க ஒரு சமையலறை கொட்டகை கூட இல்லை. நன்கொடைகள் மூலம் அவற்றைக் கட்டியெழுப்பினோம், அதில் ஒரு பகுதி அரசாங்க நிதியிலிருந்து வந்தது. ஆனால் இப்போதும், ஏழு அறைகளில் இரண்டு அறைகள் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 5-ம் வகுப்பு முதல் ப்ரீ-பிரைமரி வரையிலான குழந்தைகளுக்கு நான்கு அறைகள் அமைக்க வேண்டும். தலைமை ஆசிரியருக்கு அலுவலகம் இல்லாததால், பெற்றோர்கள் எங்களை சந்திக்க வரும்போது வெளியே நாற்காலி, மேசையை வைப்போம். ஒரு வகுப்பறை தற்போது கட்டப்பட்டு வருகிறது. சுத்தமான குடிநீருக்கு வடிகட்டி இல்லை, நாங்கள் நேரடியாக குழாயிலிருந்து குடிக்கிறோம், ”என்று அவர் கூறுகிறார்.
மேலும் சிக்கல்கள் உள்ளன கசிவு அறைகள், பிளாஸ்டர் உரிந்து மற்றும் உடைந்த தரையில் ஈரமான சுவர்கள் - ஆனால் பள்ளியில் சேர்ந்த 147 குழந்தைகளுக்கு, அவர்களில் பெரும்பாலோர் பாசிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு சில புலம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த, பள்ளி மட்டுமே ஒரே நம்பிக்கை. பாசிகர் குழந்தைகளுக்கு அருகில் வேறு பள்ளி இல்லை. என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.