Advertisment

சமூக நீதி நாயகன் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை; மிக பொருத்தம் ஏன்?

சமூக நீதி நாயகன், மண்டல் கமிஷன் மீட்பர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை ஒன்று அமைக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Former Prime Minister VP Singh during a press conference

Former Prime Minister VP Singh during a press conference

சமூக நீதி நாயகன், மண்டல் கமிஷன் மீட்பர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பேசிய மு.க. ஸ்டாலின், “வி.பி. சிங்கைக் கௌரவிக்கும் வகையிலும், தமிழ்ச் சமுதாயத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அத்தகைய சிலையை தனது அரசு அமைக்கும்” என்றார்.

Advertisment

சிலையை அறிவிக்கும் போது சிங்கின் பங்களிப்புகளை பட்டியலிட்ட ஸ்டாலின், “பிபி மண்டல் கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்று ஓபிசிக்களுக்கு 27% இடபங்கீடு வழங்க வேண்டும் என்பதை செயல்படுத்தினார். மேலும், தமிழக மக்களின் உயிர்நாடியான காவிரி பிரச்னையில், காவிரி நடுவர் மன்றம் அமைக்க வி.பி.சிங் உதவினார் என்றார்.

இந்நிலையில், அறிவிப்பு வெளியான உடனேயே, சிங்கின் பேத்திகள் அட்ரிஜா மஞ்சரி மற்றும் ரிச்சா மஞ்சரி ஆகியோர் சமூக ஊடகங்களில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

1970களில் இருந்து நிலுவையில் இருந்த ஓபிசியினருக்கான இடஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷன் அறிக்கையை முன்வைத்து, 1990 ஆகஸ்டில், ஜனதா தளம் அரசாங்கத்தின் தலைமையில் ஆட்சிக்கு வந்தவர் வி.பி. சிங். இவரை பா.ஜ.க. வெளியில் இருந்து ஆதரித்தது.

வி.பி. சிங் தாகூர் சமூகத்தை சேர்ந்தவர். அவரின் ஆட்சிக்காலத்தில் அவர் உயர் சாதி குழுக்களால் எதிர்க்கப்பட்டார். தி.மு.க. அவருக்கு உறுதியான கூட்டணியாக இருந்தது. அப்போது, முரசொலி மாறன் மத்திய அமைச்சரவை அமைச்சராகவும், டெல்லியில் கட்சியின் முகமாகவும் இருந்தார்.

1990 நவம்பரில் சிங்கின் அரசாங்கம் வீழ்ந்த பிறகும், அதன் முரண்பாடுகள் மற்றும் அதன் ராமர் கோவில் போராட்டம் தொடர்பாக பிஜேபியுடனான வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளால் விலகி, அவர் தொடர்ந்து திமுகவுடன் அன்பான உறவை பேணினார்.

தமிழ்நாட்டின் ஓபிசி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியமும் முக்கிய பங்கு வகித்தார்.

நாடு முழுவதிலும் இருந்து சமூக நீதித் தலைவர்களை ஈர்த்த மண்டல் கமிஷன் அறிக்கையை வெளியிடக் கோரி தமிழகம் அதன் தொடர்ச்சியாக போராட்டங்களையும் பேரணிகளையும் கண்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த வி.பி.சிங் அரசு கவிழ்ந்த பிறகு, கருணாநிதி தலைமையிலான திமுக மற்றும் திராவிடர் கழகம் (திமுகவின் முன்னோடியான டிகே) மண்டல் அமலாக்கத்திற்கு ஆதரவாக சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே நான்கு நாட்கள் தொடர் பொதுக்கூட்டங்களை நடத்தியது.

இந்த பேரணிகளில் சிங் ஒரு முக்கிய பிரசன்னமாக இருந்தார், அவரது ஆங்கில உரைகளை பொது மக்களுக்காக மாறன் மொழிபெயர்த்தார். இந்த நிகழ்வுகள் தமிழ் ஊடகங்களால் பரவலாக இடம்பெற்றன.

இதில் முக்கியமானவர் விடுதலை ராஜேந்திரன். அவர் 2022 வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்க கோரிக்கை விடுத்தார். இதற்கிடையில் மு.க. ஸ்டாலின் தற்போது பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகளை தேடிவருகிறார்.

இதற்கிடையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ராஜேந்திரன், “வி.பி. சிங் தனது உரைகளில் டெல்லி இந்தியாவின் தலைநகராக இருக்கலாம், ஆனால் தமிழ்நாடு சமூக நீதியின் தலைநகரம்” என்று குறிப்பிடுவார்.

OBC களுக்கான இடஒதுக்கீடு ஏன் கொண்டு வரப்பட்டது என்பதையும் அவர் எளிமையான சொற்களில் விளக்குவார். அவர் தனது அனைத்து உரைகளிலும் வட மாநிலங்களை விட தென் மாநிலம் சிறந்து விளங்குகிறது என்று வாதிட்டார்.

ஓபிசிக்களுக்கான 27% இடஒதுக்கீட்டின் மூலம் சமமான அதிகாரப் பகிர்வுதான் அவரின் நோக்கம். மேலும், சமூக நீதிக்காக நின்றதற்காக தனது அரசாங்கத்தை இழந்ததற்கு பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவிப்பார்” என்பார்.

தொடர்ந்து, நான்கு நாட்கள் பேரணிகளில், சிங்கும் கருணாநிதியும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றனர். திருநெல்வேலியில் நடந்த பேரணியில் வைகோ இணைந்தார். அப்போது டி.கே.வின் தலைவரான கே.வீரமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், எனவே அவர் பயணத்தைத் தொடங்கும் முன் சிங் அவரை மருத்துவமனையில் சந்தித்தார்” என்றும் ராஜேந்தின் கூறினார்.

இதற்கிடையில் ஏராளமான மக்கள் மதுரையில் கூடியிருந்ததையும், விருதுநகரில் கூட்டம் நள்ளிரவு 2 மணிக்கு நடந்ததையும் அவர் நினைவுப்படுத்தினார்.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான வாதங்கள் இருந்தபோதிலும், இடஒதுக்கீட்டின் அவசியத்தை விளக்குவதற்காக, வி.பி.சிங் மீண்டும் மீண்டும் தமிழ்நாடு வந்தார்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கி. வீரமணி இரு சகோதரர்கள் இடையேயான ஒரு கதையை சொல்வார்.

இரண்டு உடன்பிறப்புகளுக்கு இடையே ஒரு சொத்தை பிரிப்பது தொடர்பாக அந்தக் கதை காணப்படும்.

பசுவிற்கு உணவளிக்கும் பொறுப்பு இளைய சகோதரனுக்கும், அதன் பால் கறக்கும் உரிமை மூத்த சகோதரனுக்கும் வழங்கப்பட்டது.

ஒரு நாள், இளைய சகோதரர், திரும்பி வராத கால்நடைகளுக்கு உணவளிப்பதில் சோர்வாக, விரக்தியில் பசுவின் கொம்புகளை அசைத்தார். கலவரமடைந்த பசு பால் கறந்து கொண்டிருந்த மூத்த சகோதரனை உதைத்தது. அப்போது மூத்த சகோதரர் தனக்கு நேர்ந்த அநீதி குறித்து புகார் கூறினார்.

இந்த எளிய கதை சமூக நீதி மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை விளக்க உதவியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment