சரத் பவார் நிழலில் இருந்து விலகியதன் மூலம் கவனத்தை ஈர்க்கிறார் அஜித் பவார்

அரசியல் நெறிமுறைக்கு பெயர்போன சரத் பவார் போலன்றி, அஜித் பவார் எப்போதும் யாருக்கும் முகம் கொடுக்காதவராய், முன்கோபம் உடையவராக மகாராஷ்டிர அரசியலில் அறியப்படுகிறார்

By: Updated: November 24, 2019, 11:25:54 AM

அஜீத் பவார் கடந்த சனிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டும் விலகவில்லை, மாறாக  தனது குடும்பம், நட்பு, ஷரத் பவாரின் அரசியல் மரபு போன்றவைகளில்  இருந்தும் விலகி சென்று இருக்கிறார். தன்னிச்சையாக, பாரதிய ஜனதா கட்சிக்கு அதரவு அளித்து, துணை முதல்வர் பொறுப்பை ஏற்றது தேசியவாத காங்கிரஸ் கட்சியினரிடம்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

1970களில் தனது வழிகாட்டியான வசந்த்தா பாட்டீலுக்கு எதிராக கிளர்ச்சி செய்து சரத் பவார் தனது சொந்த அரசாங்கத்தை உருவாக்கினார். அத்தைகைய யுக்தியைத் தான் சரத் பவாருக்கு எதிராக பயன்படுத்தியிருக்கிறார் அஜித் பவார். எவ்வாறாயினும், அஜித் – சரத் பவார் அரசியல் வெவ்வேறானது.

அரசியல் நெறிமுறைக்கு பெயர்போன சரத் பவார் போலன்றி, அஜித் பவார் எப்போதும் யாருக்கும் முகம் கொடுக்காதவராய், முன்கோபம் உடையவராக மகாராஷ்டிர அரசியலில் அறியப்படுகிறார். இவரின் செயல்பாடுகள் அனைத்தும் , சரத் பவாரின் நிழலை விட்டு விலகி தன்னை முதன்மைபடுத்தும்  அரசியலை உருவாக்குவதில் மிகவும் குறியாக இருந்து வந்தது.

இப்போது, துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார், 2010-14 காங்கிரஸ்-என்.சி.பி கூட்டணியிலும் துணை முதல்வர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பவாரின் மூத்த சகோதரர் அனந்த்ராவின் மகனான இந்த அஜித் பவார், கூட்டுறவுத் துறை மூலம் அரசியலில் உயர்ந்தார். ஆணியடித்தார் போல் சொல்லவேண்டும் என்றால் பவார் குடும்பத்தில் அனைவரும் கூட்டுறவுத் துறையின் மூலம் அரசியலில் பெயர் எடுத்தவர்கள். காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசிய காங்கிரஸ் கட்சியை  உருவாகி கடந்த இருபது வருடங்களாகவே, கட்சியின் அடுத்த வாரிசாக தன்னை  வெளிப்படையாகக் கருதி வந்தவர் அஜித் பவார்.  இருந்தாலும், 2009 தேர்தலில் பவாரின் சொந்த மகள் சுப்ரியா சுலே அரசியலில் நுழைந்த போது, குடும்பத்திற்குள் வேறுபாடு  வருவதற்கான சாத்தியக்கூறுகள்  உருவாகியது.

 

சென்னையில் மழை நீடிக்குமா?  ietamil வீடியோ 

 

பவாரின் பேரனான ரோஹித் பவார், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அடைந்தது, அஜித் பவாருக்கும், அவரின் சகாக்களுக்கும்  எரிச்சல் ஏற்படுத்துவதாகவே அமைந்தது.

அஜித் பவார், தனது சொந்த கட்சியை திகைக்க வைப்பது இது முதல் முறை அல்ல. 2004ம் ஆண்டில், ஆட்சி அமைக்கும் போது காங்கிரசுக்கு முதலமைச்சரை பதவியை ஒப்புக்கொள்வதற்கான கட்சித் தலைமையின் முடிவில் அவர் பகிரங்கமாக வேறுபட்டார், எதிர்த்தார். 2012 ம் ஆண்டில், நீர்வள அமைச்சராக இருந்த காலத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர்,  திடீரென துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல், மற்ற தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கினார்.   இறுதியாக, சரத் பவார் நேரடியாக  தலையிட்டு அந்த நெருக்கடியில் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றினார்.

2019 சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு  சில வாரங்களுக்கு முன்னர், அமலாக்க இயக்குநரகம் தன்னையும் பவாரையும் பண மோசடி வழக்கில் பெயரிட்டது தொடர்பாக அஜித் பவார் பகிரங்கமாக பொது சபையில் கண் கலங்கினார்.  இந்த குற்றச்சாட்டு தன்னை  காயப்படுத்தியதாக கூறி, சட்டமன்ற பதவியையும் ராஜினாமா செய்தார்.

அஜித் பவார்  தனது மகன் பார்த் பவாரை, மாவல் தொகுதியில் இருந்து  களமிறக்க வேண்டும் என்று நிர்பந்தத்தால் தான்  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சரத் பவார் போட்டியிடுவதிலிருந்து  விலகினார் என்று பேசப்படுகிறது.  இருந்தாலும், தேர்தலில் பார்த் பவார் தோல்வியடைந்தது அஜித் பவாரை கட்சிக்கு துரோகம் செய்யும் வாய்ப்பை மேலும் உருவாக்கியது.

தொடர்ந்து ஆறாவது முறையாக தனது தொகுதியில் இருந்து மிகப்பெரிய வெற்றி வித்தியாசத்துடன்  வென்றது  அஜித் பவாருக்கு தற்போது இருக்கும் ஒரே பலம். இந்த தைரியம் தான் அஜித் பவாரை சனிக்கிழமை முடிவுக்கு வித்திட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Why ajit pawar breaking away political legacy of saradh pawar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X