மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மும்பை பயணம், ‘மிஷன் மும்பை 150 பிளஸ்’ மீது ஒரு ஒரு கண் வைத்து பாஜகவை ஒரு மோதல் போக்குக்கு மாற்றியுள்ளது. அவருடைய இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் முடிவில் கிடைத்த அரசியல் செய்தி – உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை மும்பையில் முடிக்கப் போராடுவது என்பதுதான்.
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி) தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்? அமித் ஷா பி.எம்.சி தேர்தலை வழிநடத்துவது ஏன்?
இந்த இரண்டு அம்சங்களையும் உன்னிப்பாகப் பார்த்தால், உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான பாஜகவின் கசப்பானது, 2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தானாக களம் இறங்கிய அரசியல் கொந்தளிப்பில் வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசாங்கம் 2014 முதல் 2019 வரை ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இந்த காவி கூட்டணி கட்சிகள் 2019 ஆம் ஆண்டு மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் இரண்டிற்கும் தேர்தலுக்கு முந்தைய உடன்படிக்கையை தக்கவைத்துக்கொண்டபோது, சிவசேனா ஒரு நிபந்தனையை வைத்தது. 50:50 அதிகாரத்டில் பங்கு. 2.5 ஆண்டுகள் சுழற்சி முறையில் முதல்வர் பதவி உட்பட சமமான அதிகாரப் பங்கை பாஜக தங்களுக்கு உறுதியளித்ததாக தாக்கரே குற்றம் சாட்டினார். லோக்சபா தேர்தலுக்கு முன், ‘மாடோஸ்ரீ’யில் நடந்த ஒரு ரகசிய சந்திப்பின் போது தாக்கரேவுக்கு அமித்ஷா அளித்த வாக்குறுதியை சிவசேனா சுட்டிக் காட்டியது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பாஜக கடுமையாக மறுத்தது.
தாக்கரேவின் கடுமையான பேரத்தின் மூலம் கோபமடைந்த பாஜகவின் மத்திய தலைமை முதல்வர் பதவியில் சமரசம் செய்ய மறுத்தது. இதன் விளைவாக பாஜக மற்றும் சிவசேனா இடையே பிளவு ஏற்பட்டது. பாஜக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடியின் (எம்.வி.ஏ) கீழ் மாற்று அரசாங்கம் அமைப்பதில் முடிந்தது.
துரோகத்தால் மோசமாக காயமடைந்த பாஜக இந்த அவமானத்தையும் சேதப்படுத்தியதையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று முடிவு செய்தது. மகா விகாஸ் அகாதி ஆட்சியின் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவசேனாவிற்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது – இது பாஜகவால் வடிவமைக்கப்பட்டது என்று பலர் கூறுகின்றனர். இப்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (அப்போதைய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்) தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரண்டனர். மொத்தமுள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஷிண்டே அணியில் இணைந்தனர். அதேபோல் மொத்தமுள்ள 18 எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு மாறினர். இதனால், தற்போது தாக்கரேவுக்கு வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.
இதன் மூலம், பாஜக தாக்கரேவுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. ஆனால், தாக்கரே பி.எம்.சி-யைத் தக்க வைத்துக் கொள்ளும் வரை அரசியல் பழிவாங்கல் நிறைவேறாது என்று அது இன்னும் நம்புகிறது. பி.எம்.சி உடன் தாக்கரே சிவசேனாவின் அடையாளம், நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையை கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவுகிறது. அது தாக்கரேக்கு அரசியல் ரீதியாக அதிகாரம் அளிக்கிறது.
எனவே, திங்கள்கிழமை கட்சித் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேஷன் உறுப்பினர்களிடம் அமித்ஷா பேசிய போது, “பி.எம்.சி.க்கான பெரிய போருக்கான புது ஆர்வத்துடன் களப்பணிக்குத் திரும்புங்கள்” என்றார். 30 ஆண்டு கால ஆட்சியில் இருந்து பி.எம்.வி-யை கைப்பற்றுவதற்கு ஆக்கிரமிப்பு உத்தியைக் கடைப்பிடிக்குமாறு கட்சியைக் கேட்டுக்கொள்வது வழக்கத்திற்கு மாறானது அல்ல. ஆனால், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமித்ஷா நேரடியாகத் தாக்கியதுதான் ஆச்சரியம். “சிவசேனா சிறிய கட்சியாக மாறினால், அதற்கு உத்தவ் தாக்கரே தான் பொறுப்பு…” என்று அவர் கூறியபோது எந்த வார்த்தையும் பேசவில்லை. “உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு துரோகம் செய்துவிட்டார். அரசியலில் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது.” என்று அமித்ஷா கூறினார்.
அமித்ஷாவின் வருகையின் மூலம் பாஜக தெளிவான பாதையை உருவாக்கியுள்ளது. பாஜக தனது எதிரியை அடையாளம் கண்டு பி.எம்.சி-க்கான தேர்தல் வியூகத்தை வெளியிட்டது.
பி.எம்.சி தேர்தலில் மொத்தமுள்ள 227 இடங்களில் 150 இடங்களை கைப்பற்றுவது அக்கட்சிக்கு கடினமான பணியாக இருக்கும். இதுவரை எந்த அரசியல் கட்சியும் 150 இடங்களை வென்றதில்லை. 2017ல் சிவசேனா 84 இடங்களையும், பாஜக 82 இடங்களையும், காங்கிரஸ் 22 இடங்களையும், என்.சி.பி 9 இடங்களையும் பெற்றன.
பாரதிய ஜனதா கட்சி 100 இடங்களை தாண்டும் என உள்கட்சி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் உள்ள 82 இடங்களைத் தவிர, 30 முதல் 35 இடங்கள் வரை, 500 முதல் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் கட்சி தோல்வியடைந்துள்ளது. சிறிது முயற்சி செய்தால், இந்த 30 முதல் 35 இடங்களையும் வெற்றிகொள்ள முடியும் என கருத்துக்கணிப்பு வியூகவாதிகள் நம்புகின்றனர். இரண்டாவதாக, ஷிண்டே சிவசேனா கூட்டணியில், பா.ஜ.க.வுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது. எனவே, 40 முதல் 45 இடங்களுக்கு கூடுதலாகப் போராடுவது கடினமாகத் தோன்றலாம. ஆனால், அது ஒன்று சாத்தியமில்லாதது அல்ல. ஒரு காலத்தில் தாக்கரேவுக்கு விசுவாசமாக இருந்த பல சிட்டிங் கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் பாஜக-ஷிண்டே சிவசேனாவில் சேர வாய்ப்புள்ளது என்று உள்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் அவர்கள் திட்டமிட்டபடி நடப்பதை உறுதி செய்ய, மும்பையில் அதை வழிநடத்த ஆஷிஷ் ஷெலாரை பாஜக தேர்வு செய்தது. ‘பாந்த்ரா பையன்’, ஷெலர் கடந்த இரண்டு முறை மும்பை பாஜக தலைவராக பதவி வகித்துள்ளார். அவரது தலைமையில்தான் கட்சி 2012-இல் 33 இடங்களிலிருந்து 2017-இல் 82 இடங்களை வெற்றி பெற்று பாய்ச்சலை நிகழ்த்தியது. அவர் தாக்கரேக்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதில் அறியப்பட்ட பாஜகவின் முயற்சியில் உறுதியான தலைவர். அவரைத் தவிர, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து, உத்திகளை வகுப்பதிலும், அதைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள்.
அமித்ஷாவின் மும்பை வருகை விநாயகர் சதூர்த்தி விழாவில் அவர் பங்கேற்பதன் மூலம் குறிக்கப்பட்டாலும், அவர் லால்பாக்சா ராஜா, சர்வஜனிக் கணேஷோத்சவ் மண்டல் (பாந்த்ரா மேற்கு) ஆகிய இடங்களுக்குச் சென்றதால், பெரிய அரசியல் இலக்கை சமரசம் செய்ய முடியாது என்று அவர் கடுமையாகத் தெரிவித்தார். காரியகர்த்தாவுக்கான அவரது மந்திரம் – தாக்கரேவுக்கு அவரது இடத்தைக் காட்டி பி.எம்.சி தேர்தலில் வெற்றிபெறும் வரை ஓய்வெடுக்க வேண்டாம் – என்ற குரல் மும்பையில் முன்பை விட தீவிரமாக ஒலிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“