/indian-express-tamil/media/media_files/2025/09/13/modi-mohan-bhagwat-2025-09-13-05-40-07.png)
பிரதமர் நரேந்திர மோடி, முன்னணி தேசிய நாளிதழ்கள் முழுவதும் வெளியான ஒரு கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தைப் புகழ்ந்துள்ளார். Photograph: (File Photo)
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை, முன்னணி தேசிய நாளிதழ்கள் முழுவதும் வெளியான ஒரு கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைப் புகழ்ந்தார். இதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருந்த நிலையில், மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் “தேசத்திற்கான சேவையைப்” புகழ்ந்திருந்தார். இதற்கு இடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் இணைந்திருப்பது ஒரு “குறைபாடு” அல்ல என்று கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் அதற்குப் பிறகும் வெளிப்படையான கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்திகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தனது சித்தாந்த உறவை வெளிப்படையாகப் பலப்படுத்துவதற்கான பா.ஜ.க-வின் முயற்சியை இந்த அறிக்கைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மோகன் பகவத்தின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட பிரதமரின் கட்டுரை, பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ். உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
மோதல்
ஓராண்டுக்கு முன்பு, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் அமைப்பு வலிமையை கட்சி இனி சார்ந்திருக்கவில்லை என்று கூறினார். இது ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. அத்துடன், இரு அமைப்புகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் சமநிலை குறித்த கேள்விகளையும் எழுப்பியது.
இது தொண்டர்களின் மன உறுதியைக் குலைத்துவிட்டதாகவும், 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்களின் பங்கேற்பு குறைவான ஆர்வத்துடன் இருந்ததாகவும் ஊகங்கள் எழுந்தன. பா.ஜ.க குறைக்கப்பட்ட பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கூட்டணி அரசாங்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் (ஐக்கியம்) போன்ற கூட்டாளிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில வாரங்களில், மோகன் பகவத் ஒரு பொது உரையில், “ஒரு உண்மையான சேவகன் (பணியாளர்) வேலை செய்யும் போது ஒழுக்கத்தைப் பராமரிக்கிறார். ... ஒழுக்கத்தைப் பராமரிப்பவர் தனது வேலையைச் செய்கிறார், ஆனால், பற்று இல்லாமல் இருக்கிறார். நான் இதைச் செய்தேன் என்ற அகந்தை இல்லை. அத்தகைய நபருக்கு மட்டுமே சேவகன் என்று அழைக்கப்படும் உரிமை உண்டு” என்று கூறினார்.
இந்த அறிக்கை, பா.ஜ.க தலைமைக்கு ஒரு செய்தியாகப் பார்க்கப்பட்டது. அதன் பிறகு, பா.ஜ.க தலைவர்கள் உள்ளக நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நடந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வின் வெற்றிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு தேர்தல் நிர்வாகத்தின் பின்னால் இருந்ததால் உறவுகள் சீரடைந்தன என்பதைக் குறிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரப் பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர், பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், சங்கம் மற்றும் ஆளும் கட்சிக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, அதை ஒரு “குடும்ப விவகாரம்” என்று அழைத்தார். மோகன் பகவத்தும் கடந்த மாதம் ஒரு சொற்பொழிவு தொடரின் தொடக்க விரிவுரையில், சங்கம் சுயசேவகர்களை (அதன் தொண்டர்கள்) தயார் செய்கிறது. அவர்கள் படிப்படியாக சுதந்திரமானவர்களாகவும் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாறுகிறார்கள் என்று கூறினார்.
இருப்பினும், பா.ஜ.க தலைவர் தேர்தல் பல மாதங்களாக நிச்சயமற்ற நிலையில் உள்ளது. சங்கம் ஒரு முடிவெடுக்க இவ்வளவு காலம் எடுத்திருக்காது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொற்பொழிவு தொடரில் கூறியது. இதன்மூலம், சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அதனால்தான், பா.ஜ.க தலைமையின் சமீபத்திய வாரங்களில் சங்கத்தின் பங்களிப்பை வெளிப்படையாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
உறவை வலியுறுத்துதல்
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், 11 ஆண்டுகளில் முதல் முறையாக செங்கோட்டை கொத்தளத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸைப் புகழ்ந்தார்.
"தேசத்திற்கான அதன் நூறு ஆண்டுகால சேவை ஒரு பெருமைக்குரிய மற்றும் புகழ்பெற்ற பக்கம் (வரலாற்றில்). 'வியக்தி நிர்மாண் (குண வளர்ச்சி)' மற்றும் 'ராஷ்ட்ர நிர்மாண் (தேசத்தைக் கட்டமைத்தல்)' ஆகிய தீர்மானத்துடன், எண்ணற்ற ஸ்வயம் சேவகர்கள் கடந்த 100 ஆண்டுகளாக 'மாத்ருபூமிக்கு' (தாய்நாடு) நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். சேவை, அர்ப்பணிப்பு, அமைப்பு மற்றும் இணையற்ற ஒழுக்கம் அதன் தனிச்சிறப்படையாளமாக இருந்துள்ளது. ...ஆர்.எஸ்.எஸ் ஒரு வகையில் உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம்" என்று பிரதமர் கூறினார்.
பிரதமரின் உரையின் இந்த பகுதியை சமூக ஊடகங்களில் முதலில் வெளியிட்டவர்களில் நட்டாவும் ஒருவர். அவர் மேலும், “இன்று, செங்கோட்டை கொத்தளத்திலிருந்து... ஆர்.எஸ்.எஸ்.ஸின் 100 ஆண்டுகால செழிப்பான பயணத்தைக் குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பாரத மாதாவுக்கு சேவை செய்ய அர்ப்பணித்துள்ள தொண்டர்களுக்கு புகழாரம் செலுத்தினார்,” என்றும் எழுதினார்.
உலகின் மிகப்பெரிய கலாச்சார அமைப்பு என்று அழைத்த நட்டா, “‘சேவை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம்’ என்ற நோக்கத்துடன், பல லட்சக் கணக்கான தொண்டர்கள் 'தேசத்தின் முன்னேற்றத்திற்காக சமூகத்தை மேம்படுத்த' உழைத்து வருகின்றனர்" என்றார்.
முன்னதாக, ஜூலை 30-ம் தேதி, அமித்ஷா 26/11 தாக்குதல்களுடன் ஆர்.எஸ்.எஸ்.ஸை தொடர்புபடுத்தியததற்காக காங்கிரஸைத் தாக்கினார். நாடாளுமன்றத்தில், "இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது" என்று கூறினார்.
ஆகஸ்ட் 22-ம் தேடி கொச்சியில் நடந்த மனோரமா செய்தி கருத்தரங்கில், அமித்ஷா, "நான் பா.ஜ.கயில் இருந்து வந்தவன், நான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு ஸ்வயம் சேவகன், இந்தியா சிறந்ததாக மாறும் வரை, ஓய்வெடுக்க எங்களுக்கு உரிமை இல்லை" என்று கூறினார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, என்.டி.ஏ.வின் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவரது ஆர்.எஸ்.எஸ். தொடர்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று அனி (ANI) கேட்டதற்கு, அமித்ஷா, “பலருக்கு... பிரதமர் அவரே ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தொடர்புடையவர்... நான்... ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் இணைந்திருப்பது ஒரு குறைபாடா?... நிச்சயமாக இல்லை" என்று கூறினார்.
இந்த அறிக்கைகள், பா.ஜ.க தனது சொந்த அரசியல் விரிவாக்கத்தைத் திட்டமிடும் அதே வேளையில், சங்க பரிவாரில் தனது ஆழமான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்த ஆர்வமாக உள்ளது என்பதைக் குறிக்கின்றன.
“சில அறிக்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டதால் சில தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க வேறுபட்டவை அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒரே இலக்குதான். எங்களை யாரும் பிரிக்க முடியாது. தலைமை இதை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், சமீபத்திய அறிக்கைகள் இந்தச் செய்தியை அடிமட்ட கட்சி மற்றும் சங்க தொண்டர்களுக்குச் சென்றடைய உதவும்” என்று ஒரு மூத்த பா.ஜ.க தலைவர் கூறினார்.
ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரும், பெரிய குடும்பத்திற்குள் அனைத்தும் சரியாக இருப்பதாக வலியுறுத்தினார். "கருத்து வேறுபாடுகள் நடக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பது போல. சங்கம் பா.ஜ.க-வை நேரடியாக வழிநடத்துவதில்லை. ஆனால் ஆம், அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விஷயங்கள் விலகுவதைக் கண்டால், நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். அதிகாரத்திற்கு ஒரு தனிப்பட்ட குணம் உண்டு. சில நேரங்களில், அது மக்களை உணர்வற்றவர்களாகவும், உரையாடத் திறனற்றவர்களாகவும் ஆக்குகிறது. இது நடப்பதைக் கண்டால், நாங்கள் பேசுவோம். தனிநபர் ஊசி, சித்தாந்தம் நூல் என்று நாங்கள் நம்புகிறோம். நூல் இல்லாமல், ஊசி துணியில் துளைகளை மட்டுமே போடும்" என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.