பங்களாதேஷ் ஊடுருவல் விவகாரம் மற்ற பிரச்சினைகளை மறைத்துவிட்டது, ஆதிவாசி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சமூகங்களில் இருந்து ஒரு புதிய முகம் இல்லாதது, ஹேமந்த் சோரன் அரசாங்கத்தின் மையா சம்மான் யோஜனா மற்றும் பிற ஜனரஞ்சக நடவடிக்கைகளின் தாக்கம், தேசிய தலைவர்களையே அதிகமாக சார்ந்திருத்தல், மற்றும் "உட்கட்சி நாசவேலை". ஜார்க்கண்டில் பா.ஜ.க வேட்பாளர்கள் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு மேற்கோள் காட்டிய ஐந்து காரணிகள் இவை.
ஆங்கிலத்தில் படிக்க: Why BJP lost Jharkhand: Candidates open up during poll loss review, cite 5 broad reasons
ஆதாரங்களின்படி, பா.ஜ.க தலைவர்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி மற்றும் கட்சியின் தேர்தல் நிர்வாகக் குழு மற்றும் 81 தொகுதிகளின் பொறுப்பாளர்கள் உட்பட பிற தலைவர்களுடன் சனிக்கிழமை ராஞ்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
"பரந்த அளவில், அனைத்து வேட்பாளர்களும் தங்கள் தோல்விக்கு ஐந்து காரணிகளை காரணமாக கூறுகின்றனர். ஊடுருவல் காரணமாக மக்கள்தொகை மாற்றம் நிச்சயமாக ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அது சந்தால் பர்கானா பகுதியில் உள்ள 18 இடங்களுக்கு மட்டுமே. மாநிலத்தின் மற்ற நான்கு பிராந்தியங்களிலும் வாக்காளர்களின் மனதில் இருந்த மற்ற உள்ளூர் பிரச்சினைகளை பா.ஜ.க அதே வீரியத்துடன் எழுப்பவில்லை. மறுபுறம், ஜே.எம்.எம் (JMM) மற்றும் ஜே.எல்.கே.எம் (JLKM) ஆகியவை பழங்குடியினரின் அடையாளத்தில் தங்கள் பிரச்சாரங்களை மையப்படுத்தின. ஜே.எல்.கே.எம் மாநில அரசு வேலைகளில் உள்ளூர் மக்களுக்கான முன்னுரிமை குறித்தும் பேசியது, அதே நேரத்தில் பா.ஜ.க சந்தால் பர்கானா தொடர்பான ஒரு பிரச்சினையில் கவனம் செலுத்தியது, ”என்று கூட்டத்தில் விவாதங்களை நன்கு அறிந்த ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார்.
காங்கிரஸ், ஆர்.ஜே.டி மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) லிபரேஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி, 56 இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ.க.,வை 21 ஆகக் குறைத்து, அதாவது 2019 ஆம் ஆண்டில் பா.ஜ.க பெற்றதை விட நான்கு இடங்களை குறைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தது. ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி பழங்குடியினரின் அடையாளத்தில் தனது பிரச்சாரத்தை மையப்படுத்தியபோது, பா.ஜ.க அஸ்ஸாம் முதலமைச்சரும் கட்சியின் ஜார்கண்ட் தேர்தல் இணைப் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் “பங்களாதேஷ் ஊடுருவல்” பிரச்சனையை மையப்படுத்தி தேர்தலுக்குச் சென்றது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சந்தோஷ், ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்களை சந்தித்தார். கூட்டணிக் கட்சியான ஏ.ஜே.எஸ்.யூ (AJSU) கட்சி போட்டியிட்ட 10 தொகுதிகளின் தலைவர்களுடனும் சந்தோஷ் கலந்துரையாடினார். சுதேஷ் மஹ்தோ தலைமையிலான அணி ஒரே ஒரு இடத்தை மட்டுமே வென்றது, மஹ்தோ சில்லி தொகுதியில் தோல்வியடைந்தார். முடிவுகள் குறித்து விவாதிக்க ஏ.ஜே.எஸ்.யூ கட்சியுடன் பா.ஜ.க தனி கூட்டத்தை நடத்தும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆதாரங்களின்படி, சோரன் அரசாங்கத்தின் ஜனரஞ்சக நடவடிக்கைகளான மைய சம்மான் யோஜனா மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கான முடிவு போன்றவற்றின் தாக்கம் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டன. பா.ஜ.க தலைவர்கள் கட்சிக்குள் இருக்கும் போட்டிப் பிரிவுகள் குறித்து உயர்மட்டத் தலைவர்களுக்கு தெரியப்படுத்தினர் மற்றும் "உள் நாசவேலை" காரணமாக கட்சி சில இடங்களை இழந்திருக்கலாம் என்றும் கூறினார்.
சோரன், முதல்வரின் மனைவியான காண்டே தொகுதி எம்.எல்.ஏ கல்பனா மற்றும் ஜெய்ராம் மஹதோ ஆகியோரின் சவாலை எதிர்கொள்ள புதிய மற்றும் இளம் பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி தலைவர்களை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் பா.ஜ.க வேட்பாளர்கள் வலியுறுத்தினர். “மராண்டி ஜி, (முன்னாள் முதல்வர்) அர்ஜுன் முண்டா மற்றும் சுதீஷ் ஆகியோர் இளம் வயதிலேயே முதல்வராகவும், துணை முதல்வராகவும் ஆனார்கள். ஜார்க்கண்ட் மக்கள் எப்போதும் இளம் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ஜ.க குறைத்து மதிப்பிட்ட தலைவர்களில் ஜெய்ராம் ஒருவர்” என்று சனிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் ஒருவர் கூறினார்.
மற்றொரு தலைவர், ஜே.எல்.கே.எம் (JLKM) குறைந்தது 14 தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை பாதித்தது, தேசிய ஜனநாயக கூட்டணியின் வாய்ப்புகளை பெருமளவில் சேதப்படுத்தியது. "பெரிதாக அறிமுகமில்லாத வேட்பாளர்களை நிறுத்தியதை, புதிய தலைவர் மற்றும் அவரது கட்சியிடமிருந்து உள்ளூர் வேட்பாளர்கள் கூட எதிர்பார்க்கவில்லை" என்று பா.ஜ.க நிர்வாகி கூறினார்.
மராண்டி மற்றும் முண்டா போன்ற "உள்ளூர்" முகங்களுக்குப் பதிலாக, சர்மா மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் போன்ற தலைவர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களை "அதிகமாகச் சார்ந்திருந்ததே" கட்சியின் இழப்புக்குக் காரணம் என்று சில பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். ஜார்கண்டி அடையாளம் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலத்தில் இது பின்வாங்கியது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
“பழங்குடியினரும் ஓ.பி.சி.,யும் சோரன் மற்றும் மஹதோவை நோக்கிச் சென்ற நிலையில், பா.ஜ.க தனது பிரச்சாரத்திற்கு வெளி மாநிலத் தலைவர்களை நம்பியிருந்தது. ஜார்கண்டி அடையாளத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கும் ஜார்கண்ட் மக்கள் அதை விரும்பவில்லை. இது தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது,” என்று ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார், மேலும், சோரனும் கல்பனாவும் தங்கள் பேச்சுகளில் உள்ளூர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் உள்ள 28 எஸ்.டி இடஒதுக்கீடு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.