சி.பி.எஸ்.இ தேர்வு முறைகள் மாற்றம் : இந்த வருடம் நடைபெற இருக்கும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து, சிபிஎஸ்இ செக்ரட்டரி அனுராக் திருப்பதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். கடந்த ஆண்டு வினாத்தாள்கள் வெளியானதால், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கு அதிக அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
மறு கூட்டல், மறு சீராய்வு, தேர்வு அட்டவணைகள், தேர்வு முடிவுகள் அறிவிப்பு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி அனுராக் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறினார்.
சி.பி.எஸ்.இ தேர்வு முறைகள் மாற்றம் : மறுகூட்டல் மூன்று படிநிலைகள் ஏன் ?
ஸ்கேன் செய்த விடைத் தாள்கள் தருவதற்கு பதிலாக ஏன் மூன்று படிநிலைகள் கொண்ட மறு சீராய்வு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் 1 லட்சம் பேர் முதல் படிநிலை திருத்தங்களுக்கு விண்ணப்பம் செய்தனர். 35,000 பேர் மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்தனர். 18,000 பேர் மறு திருத்தலுக்கு விண்ணப்பம் செய்தனர்.
மொத்தம் 30 லட்சம் பேர் எழுதிய தேர்வில் அனைவருக்கும் ஸ்கேன் காப்பி தருவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற சூழ்நிலைகளைத் தான் உருவாக்கும். எப்படியாவது மதிப்பெண்கள் பெற்றுவிட வழி உண்டா என மாணவர்களும் பெற்றவர்களும் யோசிக்க துவங்கிவிடுவர். பின்பு இந்த நடைமுறையில் மதிப்பெண்கள் பட்டியல் தயாரித்து வழங்க மேலும் 2 மாதங்கள் பிடிக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க : 15 நாட்களுக்கு முன்பே தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருப்பது ஏன் ?