Advertisment

இஸ்ரோவுக்கு சென்ற மோடியை காங்கிரஸ் மட்டுமல்ல, பா.ஜ.க தலைவர்களும் சந்திக்கவில்லை ஏன்?

மோடி தனது பெங்களூரு வருகையின்போது அதிகாலை நேரத்தில், காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை தன்னுடன் வர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

author-image
WebDesk
Aug 31, 2023 22:03 IST
bengaluru news, bengaluru politics, bengaluru political leaders on modis bengaluru visit, PM Modi bengaluru visit, இஸ்ரோவுக்கு சென்றபோது மோடியை காங்கிரஸ் மட்டுமல்ல, பா.ஜ.க தலைவர்களும் சந்திக்கவில்லை ஏன், மோடி பெங்களூரு வருகை, பிரதமர் மோடி, இஸ்ரோ, காங்கிரஸ், கர்நாடகா, பாஜக, சித்தராமையா, சிவக்குமார், ஜெய்ராம் ரமேஷ், PM modi, PM Modi ISRO visit, congress BJP leaders did not get to meet PM modi during ISRO visit, political pulse, latest bengaluru news, indian express

இஸ்ரோவுக்கு சென்ற மோடியை காங்கிரஸ் மட்டுமல்ல, பா.ஜ.க தலைவர்களும் சந்திக்கவில்லை ஏன்?

கட்சித் தலைவர்கள் இன்னும் கர்நாடகா முடிவுகள் மீது கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பதாகப் பேசுகிறார்கள்; அதிகாரப்பூர்வமாக, மோடி தனது பெங்களூரு வருகையின்போது அதிகாலை நேரத்தில், காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை தன்னுடன் வர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

Advertisment

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26-ம் தேதி சந்திரயான் III நிலவுத் திட்டத்தில், காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்காமல் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அரசியல் சர்ச்சையை எழுப்பினார்.

அரசாங்கத் தலைவர்கள் இருக்க வேண்டிய நெறிமுறையை மோடி விலக்கி வைத்தார். 1983-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ ராக்கெட் ஏவப்பட்ட நேரத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என்.டி. ராமராவ் உடனான கருத்து வேறுபாடுகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒதுக்கிவைத்ததைப் பற்றி ஆகஸ்ட் 29-ம் தேதி ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார். “அவர்கள் கசப்பான அரசியல் எதிரிகள், ஆனால், இந்திரா காந்தி என்.டி. ராமாராவை ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும்படி அழைத்தார்” என்று அவர் எழுதியுள்ளார்.

கிரீஸ் பயணத்திலிருந்து நேரடியாக பெங்களூரு வந்த பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிறகு, மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் விண்வெளி ஆணையத்தின் உறுப்பினரான என்.எஸ்.ஏ அஜித் தோவல் ஆகியோருடன் இஸ்ரோவுக்குச் சென்றார்.

ஆகஸ்ட் 26-ம் தேதி காலை 6.30 மணிக்கு பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு வந்த மோடியை கர்நாடக தலைமைச் செயலாளர் வந்திதா சர்மா மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் ஆகியோர் வரவேற்றனர். பா.ஜ.க-வின் உயர்மட்ட தலைவர்கள் - மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் மற்றும் பெங்களூரு எம்.எல்.ஏ-க்களான முன்னாள் அமைச்சர்கள் கூட பிரதமர் மோடி அருகில் அனுமதிக்கப்படவில்லை.

விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த பா.ஜ.க ஆதரவாளர்களிடம் சுருக்கமாக உரையாற்றிய மோடி, “நான் வெகுதூரத்தில் இருந்து வருவதால், தாமதமாக வரலாம் என்ற கவலை இருந்தது. எனவே, முதல்வர், துணை முதல்வர் மற்றும் கவர்னர் ஆகியோரிடம், இவ்வளவு அதிகாலையில் அவரை வரவேற்பதற்கு சிரமப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். விஞ்ஞானிகளை வாழ்த்தி விட்டு செல்கிறேன் என்று கூறினார். முறையான வருகையில் நெறிமுறையைப் பின்பற்றலாம் என்று சொன்னேன். இந்த வருகையை எளிதாக்கியதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலவில் தரையிறங்கும் நேரத்தில் வெளியில் இருந்த பிரதமர் மோடி, விஞ்ஞானிகளைப் பாராட்டுவதற்காக நேராக பெங்களூருக்கு விமானத்தில் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை என்றும் பேசினார்.

கர்நாடக அரசியல் வட்டாரங்களில், காங்கிரஸ் தலைவர்களை ஒதுக்கி வைக்கும் பிரதமரின் நடவடிக்கை, மே மாதம் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்வி குறித்து மாநில பா.ஜ.க தலைவர்கள் மீதான அவரது கோபத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்த பயணத்தின் போது பிரதமரை காங்கிரஸ் முதல்வர், ஆளுநர் மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்றிருந்தால், அவர் உள்ளூர் பா.ஜ.க தலைவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

கர்நாடகா காங்கிரசும், அம்மாநில பா.ஜ.க தலைவர்களை விமான நிலையத்தில் மோடியின் கோபத்தின் அடையாளமாக ஒதுக்கி வைத்தார் என்று கேலி செய்து வருகின்றனர். மாநில பா.ஜ.க பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியமனங்களும் மாநிலத் தலைமையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

“மாநில பாஜக தலைவர்களுக்கு அடிப்படை முக்கியத்துவம் கூட வழங்கப்படவில்லை. மோடியின் கோபம் தணியும் வரை, புதிய எதிர்க்கட்சித் தலைவர் கர்நாடகாவில் நியமிக்கப்பட மாட்டார். அது சாத்தியமில்லாததால், புதிய மாநில பா.ஜ.க தலைவர் நியமிக்கப்படுவாரா என்பது சந்தேகமே. இதற்கிடையில், தற்போதைய மாநில பா.ஜ.க தலைவர் தெருவில் நிற்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் நிலவரத்தைப் பற்றி மாநில பா.ஜ.க தலைவர்கள் தனக்கு போதுமான அளவு விளக்கமளிக்கவில்லை என்று மோடி நம்புவதாக பா.ஜ.க உள்விவகாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பா.ஜ.க-வின் கர்நாடக மாநில பிரிவுக்குள் வெளிப்படையான பகை, காங்கிரஸின் ஊழல் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடத் தவறியது. பல இடங்களில் தவறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தது, காங்கிரஸின் தேர்தல் உத்தரவாதங்களின் தாக்கத்தை மதிப்பிடுவதில் ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் விரிவான தோல்வியைச் சந்தித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, கட்சிப் பதவிகளுக்கான நியமனங்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்குப் பிறகு வரலாம் என்று பரிந்துரைத்திருந்தார். ஆனால், அந்த நாளும் இப்போது கடந்துவிட்டது. இதற்கிடையில், மாநில பா.ஜ.க தலைவர் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கிய பதவி நீட்டிப்பில் தொடர்கிறார். அதே நேரத்தில் மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைத்து 100 நாட்களுக்குப் பிறகும் எதிர்கட்சித் தலைவர் பதவி நிரப்பப்படாமல் காத்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Modi #Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment