கர்நாடகாவில் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது தொடர்பாக காங்கிரஸைத் தாக்கிய பாஜக, இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீர்குலைக்க விரும்பும் நபர்களுடன் ராகுல் காந்தி பழக்கம் கொள்கிறார் எனக் குற்றஞ்சாட்டியது.
மேலும், புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸுக்கு நெருக்கமான மற்றும் நிதி ரீதியாக ஆதரவளிக்கும் நபர்களின் ஆதரவை ராகுல் காந்தி பெற்றதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், அதானி குழும நெருக்கடியின் கொந்தளிப்பு நாட்டில் "ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை" திறக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியை சொரெஸ் குறிவைத்த பின்னர், இரானி சொரெஸை குறிவைத்து, சொரெஸ் "தலையிடுவதில் தவறான எண்ணம் கொண்டுள்ளார்" என்று குற்றம் சாட்டினார். இந்தியாவின் ஜனநாயக செயல்பாட்டில் அவரது தேவைக்கு இணக்கமான ஒரு அரசாங்கத்தை விரும்புகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, ராகுல் காந்தியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது அவரது சந்திப்புகள் குறித்து அவர் கேள்விகளை எழுப்பினார்.
“காங்கிரஸால் பதிலளிக்கப்படாத கேள்வி இதுதான்: ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தின் போது சுனிதா விஸ்வநாத்தை சந்தித்தது உண்மையா? ஜார்ஜ் சொரோஸ் என்ன செய்ய நினைக்கிறார் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரிந்திருக்கும் போது, காந்தி ஏன் அவரால் நிதியுதவி பெற்றவர்களுடன் பழகுகிறார்” எனக் கேள்வியெழுப்பினார்.
பிப்ரவரி 2019 இல் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தீர்மானத்தை மேற்கோள் காட்டிய இரானி, தெற்காசியாவில் செயல்படும் குழுக்களால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவித்ததாகக் கூறினார்.
மேலும், தீர்மானத்தின் ஒரு பகுதி வட அமெரிக்காவின் இஸ்லாமிய வட்டத்திற்கும் ஜமாத்-இ-இஸ்லாமிக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுவதாக பாஜக தலைவர் மேலும் கூறினார்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் காந்தியை கேலி செய்யும் வீடியோவை வெளியிட்டு "குழுக்களுக்குள் பகையை ஊக்குவித்தல்" மற்றும் "மக்களை தூண்டியதற்காக" மாளவியா மீது கர்நாடக காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது.
மீபத்தில் மாளவியா வெளியிட்ட ட்வீட் தொடர்பாக கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரமேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.