Advertisment

மசூதி மீது கைவைத்தால்.. பா.ஜ.க.,வை தடுத்து நிறுத்திய முலாயம் சிங்!

பாபர் மசூதிக்கு தீங்கு விளைவிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கர்ஜித்தார் முலாயம் சிங். பின்னாள்களில் இஸ்லாமியர்கள் விரும்பும் கட்சியாக சமாஜ்வாதி திகழ்ந்தது.

author-image
WebDesk
New Update
Why Mulayam came to be sole claimant of 19 Muslim vote of UP

பா.ஜ.க.வின் ராமர் கோவில் இயக்கத்தை வேகமாகத் தடுத்து நிறுத்திய முலாயம் சிங், தன்னை ஒரு சக்திவாய்ந்த தலைவராக நிலை நிறுத்திக் கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக முலாயம் சிங் முதன் முதலாக ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தயவில் பதவியேற்ற போது, 1990 அக்டோபர் 30 அயோத்தியில் கலவரம் மூண்டது. அப்போது சமாஜ்வாதி என்ற கட்சி உருவாகவில்லை.
அப்போது கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். ஜனதா தளம் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்திருந்தது.

Advertisment

எனினும் முலாயம் எதற்கும் அஞ்சவில்லை, இந்த நடவடிக்கையின் மூலம், முலாயம் தன்னைத் தள்ளாதவர் என்று நிலைநிறுத்திக் கொண்டார், பா.ஜ.கவின் ராமர் கோவில் இயக்கத்தையும் தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து, மத்தியிலும் மாநிலத்திலும் ஜனதா தளத்துக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ.க வாபஸ் பெற்றது. இதையடுத்து, முலாயமின் அரசு கவிழ்ந்தது. அதன்பின்னர், 1991இல் பாஜக ஆட்சிக்கு வந்தது. மற்றொரு கரசேவகர்கள் குழு பாபர் மசூதியை தாக்கியது.

அப்போதைய முதலமைச்சர் முலாயம் உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையின்பேரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் முடிவை எடுத்தார்.
அதற்கு முன், கரசேவகர்களின் நோக்கங்கள் குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகளின் எச்சரிக்கையின் பேரில் செயல்பட்டார்.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது, அவர், "மஸ்ஜித் கோ நுக்ஸான் நஹின் பஹுஞ்ச்னே டெங்கே (மசூதிக்கு தீங்கு விளைவிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்)" என்றார்.

காவல்துறையின் நடவடிக்கை, லத்திசார்ஜ் உட்பட பெரும்பாலான கரசேவகர்கள் கலைந்து சென்றதை உறுதி செய்தது. . ஒரு சில பாபர் குவிமாடங்களை தாக்கினார்கள்.
எனினும் அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த இறப்புகள் குறித்து இன்றளவும் பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமாக 30 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முலாயம் சிங்கை முல்லா முலாயம் என அழைத்தனர். இந்த நிலையில், 1992இல் முலாயம் சிங் சமாஜ்வாதி என்ற கட்சியை உருவாக்கினார்.
பின்னாள்களில் அந்தக் கட்சி இஸ்லாமியர்களின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தது.
மாநிலத்தில் 19 சதவீதமுள்ள முஸ்லீம் வாக்குகளைப் பெறுவதற்கு சமாஜ்வாதி மட்டுமே உரிமை கோருவதாகக் கருதப்பட்டது, அப்போது, முலாயம் ஒரு வலிமைமிக்க முஸ்லீம்-யாதவ் கூட்டணியை உருவாக்கினார்.

1992க்குப் பிறகு உத்தரப் பிரதேசத்திற்கு அப்பால் கட்சிகளால் தேடப்படும் தலைவராகவும் அவர் உருவானார். 1993 தேர்தலில் SP போட்டியிட்ட 256 இடங்களில் 109 இடங்களில் இஸ்லாமியர்களின் ஆதரவு இருப்பதாக நம்பப்பட்டது.
தொடர்ந்து, முலாயம் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராம் மற்றும் முலாயம் சிங் ஆகியோர் பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

அப்போது முலாயம், கன்ஷிராம் இங்கே ஸ்ரீராம் எங்கே என பாஜகவினர் பரப்புரை செய்தனர். பின்னாள்களில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் மாநிலத்தில் பலம் பெற்றன.
தொடர்ந்து, முலாயம் தனது மூன்றாவது முறையாக முதல்வராக (2003-2007) பொறுப்பேற்றார். அப்போதும் அவருக்கு முழு முஸ்லீம் ஆதரவு காணப்பட்டது.

தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி 39 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தலித்துகளுக்கு அப்பால் தனது அரசியலை விரிவுபடுத்த முஸ்லிம்கள் மற்றும் உயர் சாதியினரை அணுகத் தொடங்கினார்.
இது 2007இல் பகுஜன் சமாஜ் வெற்றி பெற உதவியது. அப்போதிருந்து, மாயாவதி அனைத்து சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்களிலும் முஸ்லீம்களுக்கு டிக்கெட்டுகளை உறுதி செய்தார், மேலும் முஸ்லிம் வாக்குகளில் எப்போதும் ஒரு பங்கைப் பெற்றார்.

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி மொராதாபாத் எம்பி எஸ் டி ஹசன், “முலாயம் சிங்ஜி உதவி தேவைப்படும் அனைத்து சாதியினருக்காகவும் நின்றார், ஆனால் அவர் எப்போதும் முஸ்லீம் சமூகத்திற்காக நின்றார்.
முஸ்லீம்களுக்கு போலீஸ், அரசு வேலை, தேவைப்படும் போதெல்லாம் உதவி செய்வது என, முலாயம் சிங்ஜி அரசியல் சாசனத்தின்படி எடுத்த முடிவுகளை இன்று காணவில்லை. இன்றைய அரசியல் இந்து-முஸ்லிம் அடிப்படையிலானது” என்றார்.

கடந்த காலங்களில் முலாயம் சிங்கிடம் இருந்த சமாஜ்வாதி கட்சி தற்போது அவரது மகன் அகிலேஷிடம் உள்ளது.
அகிலேஷ் கட்சியிலும் இஸ்லாமியர்களின் தலைவராகவும், சமாஜ்வாதி கட்சி உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவராகவும் அறியப்படும் ஆசம் கான் தற்போது கட்சியில் அதிருப்தியில் உள்ளார்.
உத்தரப் பிரதேச எம்எல்ஏ ஆன இவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samajwadi Party
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment