பீகாரில் மதுவிலக்கை வலியுறுத்தும் எதிர்க் கட்சிகள்: என்.டி.ஏ கூட்டணி வாயே திறப்பதில்லை ஏன்?

பீகார் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மதுவிலக்கு குறித்து என்.டி.ஏ கூட்டணி ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

பீகார் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மதுவிலக்கு குறித்து என்.டி.ஏ கூட்டணி ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
bjp

பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அனல் பறக்கும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜன சூரஜ் கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்த சில நிமிடங்களில் மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளது. மேலும், மகாகட்பந்தன் கூட்டணி தனது அறிக்கையில் மறுபரிசீலனை செய்வதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் மதுவிலக்கு பற்றி பேசாத ஒரே கட்சி ஐக்கி ஜனதா தளம் தான்.  அக்கட்சியின் முதலமைச்சர் நிதீஷ் குமார் தான் மாநிலத்தில் மதுவை தடை செய்யும் 'மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தை' கொண்டு வந்தார்.

Advertisment

மகாகட்பந்தன் தனது தேர்தல் அறிக்கையில்,  பதநீருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும், சட்டத்தை மீறியதற்காக சிறையில் வாடும் தலித்துகளுக்கும் மற்ற ஏழைகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் பீகார் மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12.79 லட்சம் பேரில், 85 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர். இது தேசிய ஜனநாயகக் கூட்டணி பகிரங்கப்படுத்த விரும்பாத ஒரு உண்மை

நிதீஷ் குமார், மகாகட்பந்தன் அரசாங்கத்தை வழிநடத்தியபோது இந்த மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்பட்டது. 2015-ஆம் ஆண்டில், அப்போது இருந்த கணிப்புகள் மற்றும் 2014-ஆம் ஆண்டின் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க தக்கத்தை மீறி மகாகட்பந்தன் கூட்டணி என்.டி.ஏ-வை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு லாலு பிரசாத் மற்றும் நிதீஷ் மீண்டும் இணைந்ததால் கிடைத்த இந்த மகத்தான வெற்றி, மத்தியில் மோடிக்கு ஒரு மாற்றுத் தலைவராக நிதீஷின் பிம்பத்தை உயர்த்தியது. 

2015-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் மதுவிலக்கும் ஒன்றாகும். அதற்கு முன்பு  2005-ல் நிதீஷ் குமார் முதல் முறையாக முதலமைச்சரான பிறகு, மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக கிராமங்கள் வரை மதுக்கடைகளைத் திறக்க வழிவகுத்த ஒரு தாராளமயமாக்கப்பட்ட மதுபானக் கொள்கையை பீகாரில் அறிமுகப்படுத்தினார். இதன் விளைவாக, 2005-ரூ.500 கோடியாக இருந்த பீகாரின் கலால் வரி வருவாய், 2015-க்குள் ரூ.5,000 கோடிக்கு மேல் உயர்ந்தது.

Advertisment
Advertisements

மதுவிலக்கும் அரசியலும்

2024 -இல் வெளியான 'தி லான்செட்' (The Lancet) அறிக்கையின்படி, மதுவிலக்குக்குப் பிறகு பீகாரில் 21 லட்சம் பெண்கள் வீட்டு வன்முறை இல்லை என்று தெரிவித்துள்ளனர். 2017-ல் ஜனதா தளம் கட்சி, மகாகட்பந்தன் கூட்டணியில் இருந்து விலகி என்.டி.எஆ-வில் சேர்ந்தது. கடைசியாக நடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 71-ல் இருந்து 43-ஆகக் குறைந்தது, இது பா.ஜ.க-வின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியாகும். 

பீகாரில் மதுவிலக்கு சட்டம் அமல்படுத்துவதற்கு சிரமமாக இருந்துள்ளது. டிசம்பர் 2021-ஆம் ஆண்டு அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசுகையில், பீகார் மதுவிலக்கு சட்டம் "நிர்வாகத் தொலைநோக்கு இல்லாமல்" உள்ளது என்றும், இதனால் நீதிமன்றங்களில் வழக்கு "நெரிசல்" ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்தார். அப்போதிருந்து, நிதீஷ் அரசாங்கம் பல திருத்தங்களைக் கொண்டு வந்தது. முதல் முறையாக மது அருந்துபவர்களை கைது செய்வதற்கான விதிகளைத் தளர்த்தியது, அத்துடன் குடும்பத்தில் யாராவது மது அருந்தினால் சமூக அபராதம் மற்றும் வீடுகளைப் பறிமுதல் செய்யும் விதிகளும் கொண்டு வரப்பட்டன.

தற்போதைய தேர்தல் நிலைப்பாடுகள்

மதுவிலக்கு பிரச்சனையில் மிக அதிகமாக ஒலிக்கும் குரல், ஜன சூரஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் உடையது தான்.தான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு தடையை 15 நிமிடங்களுக்குள் நீக்கிவிடுவேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "மதுவிலக்குத் தடையின் நெறிமுறை அம்சங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், உலகெங்கிலும் உள்ள ஆதார அடிப்படையிலான கொள்கைகள், மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தக்கூடியது அல்ல என்று கூறுகின்றன. பீகாரின் மதுவிலக்குச் சட்டம் மொத்த தோல்வி. இது ஆண்டுக்கு ரூ.20,000 கோடி மதிப்புள்ள சட்டவிரோதப் பொருளாதாரத்தை உருவாக்குகிறது” என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி, ஜனதா தளம் கட்சி மதுவிலக்கு பற்றிப் பேசாதது ஆச்சரியமில்லை என்று கூறினார். இது கூட்டணிக்கு உதவாது என்று என்.டி.ஏ-வுக்குத் தெரியும். மாறாக, இது என்.டி.ஏ-வின் கழுத்தில் ஒரு கயிறாக மாறிவிட்டது. இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தியதாகவும் நிதீஷால் உரிமை கோர முடியவில்லை. தடையை நீக்கவும் அவரால் முடியவில்லை என்றார்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், மதுவிலக்குக்குப் பிறகு வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளதாகப் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் பற்றாக்குறை மற்றும் இந்தியா-நேபாள எல்லையின் ஊடுருவக்கூடிய தன்மை காரணமாகச் சட்டத்தை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், மதுவிலக்கின் நன்மைகளை மறுக்க முடியாது என்றார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க

Bihar Election Nda

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: