ஆயுதங்களோடு இருந்த ராணுவ வீரர்கள் ஏன் அதை பயன்படுத்தவில்லை?

எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Sushant Singh

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு,  இந்தியா-சீனா துருப்புகளுக்கு இடையே நடத்த கைகலப்பு சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த  வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் “இந்திய துருப்புக்கள் ஆயுதம் ஏந்தியிருந்தன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை” என்று தெரிவித்தார்.

 

ஜெய்ஷங்கர் தனது ட்விட்டரில், ” உண்மைகளை நேராகப் பெறுவோம். எல்லைப் பணியில் உள்ள வீரர்கள்  ஆயுதங்களை எப்போதும் ஏந்தி செல்கின்றன. குறிப்பாக இந்திய நிலையில் இருந்து வெளியேறும்போது. ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இருந்த வீரர்களும் ஆயுதங்கள் வைத்திருந்தனர். எல்லை மோதல்களில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நீண்டகால நடைமுறை (1996 & 2005 ஒப்பந்தங்களின்படி) உள்ளது” என்று பதிவு செய்தார்.

1996 மற்றும் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த நெறிமுறைகளை ஜெய்சங்கர் குறிப்பிடுகிறார்.

1996 வருட ஒப்பந்தம் இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைதியை உறுதி செய்வதற்கான நல்லெண்ண நடவடிக்கைகள் பற்றியது.

1996 வருட ஒப்பந்தத்தின் பிரிவு VI (1)ன் கீழ், “இந்தியா-சீனா எல்லைகட்டுப்பாட்டு கோட்டின் இரண்டு கிலோமீட்டர் வரம்புக்குள் … இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு , உயிரியல் சீரழிவு, அபாயகரமான இரசாயனம், குண்டு வெடிப்பு போன்ற ஆபத்து விளைவிக்கும் இராணுவ நடவடிக்கைகளை ஈடுபட கூடாது.  இருப்பினும், வழக்கமான எல்லைப் பாதுகாப்பு பணிகளுக்கு தேவைப்படும் சிறியரக துப்பாக்கிகளுக்கு இந்த தடை பொருந்தாது ”என்று 1996 ஒப்பந்தத்தின் பிரிவு VI (1) கூறுகிறது.

எவ்வாறாயினும், ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளா பிரிவு VI (4) தற்போதைய சூழலில் மிகவும் பொருந்த கூடியாதாக உள்ளது: பிரிவு VI (4)ல்  “ எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் நிலைமை அதிகரிப்பதைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். பதட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும்  இராஜதந்திர பிரிவு  மூலம் உடனடி ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பிரிவு X (1) ல், “ இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் ஏற்படும்  பொதுவான புரிதல் சார்ந்து, தற்போதைய ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தப்படும். இரு தரப்பினரும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை   உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் செயல்முறையை   ஒப்புக்கொள்கின்றன ” என்று தெரிவிக்கப்பட்டது.

2005 வருட ஒப்பந்தத்தின் பிரிவு 1 இல்,“இரு தரப்பினரும் எல்லைத் தொடர்பான கேள்வியை அமைதியான மற்றும் நட்புரீதியான ஆலோசனைகள் மூலம் தீர்ப்பார்கள்.

எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 2013 ஒப்பந்தத்தில் எந்தவொரு தரப்பும் அதன் இராணுவ திறனை மற்றொன்றுக்கு எதிராகப் பயன்படுத்தாது என்று தெரிவித்தது.

இருப்பினும், மேற்கூறிய ஒப்பந்த விதிகள், கடந்த திங்களன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலுக்கு நேரடியாக பொருந்தாது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் பேசிய இராணுவ அதிகாரிகள், சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் மோதிய பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் வெடிமருந்து உட்பட ஆயுதங்களுடன் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தினர். துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தாலும், தற்செயலான துப்பாக்கிச் சூடு (அ) தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காக ஆயுதத்தின் முனைகள் தரையை நோக்கி இருக்கும்” என்று தெரிவித்தனர்.

இந்த நடைமுறைகள் குறிப்பிட்ட காலத்தில் உருவானது. உதாரணமாக,1962 வருடத்திற்குப் பிறகு லடாக்கில் உள்ள சீன-இந்தியா எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதில்லை. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு தீர்வின் ஒரு பகுதியாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தகைய சூழலில், துப்பாக்கிச் சூடு அல்லாத பிற ஆயுதங்கலைப் பயன்படுத்த ராணுவப்  படையினர் பழகிவிட்டனர். முந்தைய காலங்களில் பாறை கற்கள்,  மட்டைகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்திருந்தாலும் யாரும் இறக்கவில்லை. எவ்வாறாயினும், இது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள மூர்க்கத்தனம் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த மே 5/6 அன்று பாங்காங் த்சோ ஏரிக்கரையில்  நடந்த மோதலின் போது 70 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் காயமடைந்தனர்.

சமீபத்தில், இந்திய இராணுவம் கூட லடாக் எல்லைப்பகுதியில்  நிறுத்தப்பட்டுள்ள தனது வீரர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கூட்டத்தை கலைக்கும் பாதுகாப்பு கருவிகள் வழங்க கட்டளையிட்டதாக சில தகவல்கள் தெரிவிகின்றன.

மணிநேரங்களாக நீடித்த ஒரு மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து ஏன் எந்த அதிகாரியும் நினைக்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உட்பட பல பகுதிகளில் இருந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது.   இதுபோன்ற சூழ்நிலையில், பீரங்கித் தாக்குதல்கள் கூட நியாயப்படுத்தப்பட்டிருக்கும்  என்று  சில இராணுவ வீரர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், இந்திய மற்றும் சீன வீரர்கள்  ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் ஆட்களில் ஒருவரைத் தாக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவது மிகவும் கடினம் ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why not open fire even soldiers on lac were carrying arms

Next Story
இளம் பல்கலைக்கழக வேந்தர்… அம்பேத்கர் விருது பெற்று சாதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express