குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, கணவர் இறந்த பிறகும் மனைவி விவாகரத்து ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியான வழக்கின் தீர்ப்பில், நீதிபதிகள்அனு சிவராமன் மற்றும் அனந்த் ராமநாத் ஹெக்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, விடோ (widow) சலுகைகள் பெற மனைவிக்கு அனைத்து உரிமையும் உண்டு என்று கூறினர். குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை எதிர்த்து மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவரது கணவர் உயிரிழந்தார்.
கணவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்ததும், அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்காததன் மூலம், மனைவி தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்ற கணவரின் வாதம் நிரூபிக்கப்பட்டதாக கூறி குடும்ப நல நீதிமன்றம் முன்பு தீர்ப்பளித்தது.
கணவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருப்பது இரு தரப்பினரின் மோதல் போக்கை காட்டுகிறது. இதனால் இந்து திருமணச் சட்டம் பிரிவு 13-ன் கீழ் விவாகரத்து ஆணை வழங்கப்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மனைவி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/bangalore/wife-challenge-divorce-order-death-husband-karnataka-high-court-9332292/
மனைவி தரப்பு வக்கீல் வாதிடுகையில், மனைவியின் மீது கொடூரத்தை காட்ட எந்த ஆதாரமும் இங்கு இல்லை என்று வாதிட்டார், மேலும் காவல்துறையில் புகார் அளித்தது உண்மையில் அவரது அப்பா. மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பெண்ணின் தந்தை (மாமனாரை) தாக்கியதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
கர்ப்பமாக இருந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே செல்ல வைத்து, அவரை அழைத்து வர எந்த விசாரணையும் முயற்சியும் எடுக்காதது கணவரின் கொடுமை என்றும் வாதிடப்பட்டது. மனைவியையோ அல்லது அவர்களின் குழந்தையையோ பார்க்க கணவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.
உயர் நீதிமன்றம் அமர்வு உச்ச நீதிமன்ற முன்னுதாரணத்தைக் கூறி, “வழக்கு நிலுவையில் இருக்கும் போது கணவர் இறந்து போனாலும், வழக்கின் நிலையைப் பாதிக்கும் நேரடியான சட்ட விளைவுகள் ஏற்படும். எனவே ஆணையைப் பெற்ற பங்குதாரர் ஆணையைப் பெற்ற பிறகு இறந்துவிடுவதால் மட்டுமே மேல்முறையீடு குறையாது என்று கருதப்பட்டது” என்று கூறியது.
மேலும் இந்த வழக்கில், குடும்ப நல நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகள் ஆதாரமற்றவை என்றும், விவாகரத்து ஆணையை வழங்குவதற்குத் தேவையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“