காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் பஞ்சாப் முதல்வர் செவ்வாய்க்கிழமை அன்று அவர் தன்னுடைய புதிய கட்சியை விரைவில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் பட்சத்தில் பாஜக மற்றும் ஷிரோமனி அகலி தளம் கட்சிகளுடன் கூட்டணி வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
டெல்லியில் சில நாட்களாக தங்கியிருக்கும் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அம்ரிந்தர் சிங்கிற்கு பதிலாக அவருடைய செய்தி ஆலோசகர் தொடர்ந்து செய்த ட்வீட்டில், “பஞ்சாபின் எதிர்காலத்திற்கான யுத்தம் ஆரம்பம். விரைவில் பஞ்சாபிற்காகவும், பஞ்சாப் மக்களின் நலனுக்காகவும், ஓர் ஆண்டுக்கும் மேலாக நம்முடைய வாழ்க்கைகாக போராடி வரும் விவசாயிகளின் நலனுக்காகவும் பணியாற்ற புதிய கட்சியை ஆரம்பிப்பேன் என்றும்” அறிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் பட்சத்தில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு இருக்கும் என்றும், திந்த்ஷா மற்றும் ப்ரம்பூரா அகலி தள உறுப்பினர்கள் போன்று ஒரே எண்ண ஓட்டத்தில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பஞ்சாபின் உயர்ந்த தலைவர் என்று கூறி அம்ரிந்தரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது பாஜக. ஷிரோமனி அகலி தளம் கட்சியின் தலைவர் சுக்தேவ் சிங், அம்ரிந்தர் இன்னும் எங்களை அணுகவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அம்ரிந்தரின் மனைவி ப்ரினீத் கௌர் விலகுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பஞ்சாப் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாபிற்கு அரசியல் நிலைத்தன்மை தேவை மற்றும் உள்புற, வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு தேவை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அம்ரிந்தர் கூறியுள்ளார். மேலும், தற்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று என்னுடைய மக்களுக்கு சத்தியம் செய்து தருகிறேன் என்று அவர் கூறினார்.
நவோஜித் சிங் சித்துவிற்கு விசுவாசமாக இருக்கும் பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, இந்த பூனை பையில் இருந்து வெளியேறிவிட்டது. பாஜக மற்றும் எஸ்.ஏ.டி கட்சி உறுப்பினர்களுடம் மறைமுகமாக பேசி வருகிறார் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். பாஜகவுடனான அவரது உறவு தற்போது வெளிப்படையாகிவிட்டது. எஸ்.ஏ.டி. கட்சியுடனான உறவும் விரைவில் வெளியே வரும் என்று குறிப்பிட்டார்.
சுக்தேவ் இது குறித்து பேசிய போது, இதுவரை கட்சி தலைவர்களுடன் இதற்கான முன்மொழிவுடன் அம்ரிந்தர் அணுகவில்லை என்று கூறினார். அவர் முதலில் எங்களிடம் பேசட்டும். பிறகு என்ன என்பதை முடிவு செய்யலாம். அனைத்து கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்த பிறகே இதில் முடிவு எடுக்க முடியும் தனி ஒருவராக அவருடன் கூட்டணி அமைப்பது மற்றும் மறுப்பது குறித்து என்னால் முடிவு எடுக்க இயலாது என்று கூறினார்.
கடந்த ஆண்டு திண்ட்ஷா எஸ்.ஏ.டி. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு அவர் ரஞ்சித் சிங் ப்ரம்பூரா போன்று கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்களுடன் சன்யுக்த் கட்சியை துவங்க்னார். திண்ட்ஷா மற்றும் ப்ரம்பூரா தலைவர்கள் சாக்ரிலேஜ் வழக்குகளை கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். சுக்பிர் பாதலின் தலைமை குறித்தும் திண்ட்ஷா தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.
பஞ்சாப் பாஜகவின் பொதுச் செயலாளர் சுபாஷ் வர்மா, அம்ரிந்தருடன் கைகோர்ப்பது கட்சிக்கு நல்லது என்று கூறினார். "இப்போதைக்கு, அவர் பஞ்சாபில் மிக உயரமான தலைவர். அவருக்கு அருகில் வேறு யாரும் இல்லை. அவர் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி, பாஜகவுக்கு ஆதரவளிக்க விரும்பினால், அது பஞ்சாப் பாஜகவுக்கு நல்லது. விஷயங்கள் எப்படி மாறும் என்று பார்ப்போம்” என்று கூறினார்.
பஞ்சாப் பாஜகவின் செயலாளர், அம்ரிந்தர் மூத்த தலைவர். அவருடைய கட்சி அவரை அவமானப்படுத்தியது.அவர் தன்னுடைய கட்சியை துவங்க விரும்பினால், தன்னுடைய ஆதரவை பாஜகவிற்கு தர விரும்பினால் நாங்கள் அவருடைய முடிவை வரவேற்கின்றோம். அவரைப் போன்ற தலைவர்களை பின்தொடரும் மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கான மரியாதையை எப்படி வழங்க வேண்டும் என்று கட்சிக்கு தெரிந்திருக்க வேண்டும். 2017ல் பஞ்சாபில் நடந்த விதான் சபா தேர்தலின் முகமாக இருந்த ஒரு உயரமான தலைவரை காங்கிரஸ் அவமதித்தது வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார்.
காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட விதத்தில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அவர் கட்சியை விட்டு விலகுவதாகவும் ஆனால் தனது விருப்பங்களை திறந்து வைத்திருப்பதாகவும் அம்ரிந்தர் கூறினார். தனது கட்சிக்கான கொள்கைகளை வகிப்பதிலும், அதற்கான பெயர் வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.