பெட்ரோல் விலை : பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் சற்றும் சலிப்பில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 80 ரூபாய் என்பதே வரலாற்று நிகழ்வு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 35 காசுகள் அதிகரித்து ரூபாய் 81.63ற்கு விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூபாய் 89.01ற்கு விற்பனையாகிறது.
டீசல் பொருட்களிலும் எந்த மாற்றமும் இல்லை. அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசுகள் அதிகரித்து ரூபாய் 73.54ற்கு விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூபாய் 78.07ற்கு விற்பனையாகிறது.
நேற்றைய விலைப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81.28 ரூபாய் ஆகும். டீசலின் விலை 73.30ய் ஆகும். தே போல் மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 88.67 ரூபாய் ஆகும். டீசலின் விலை 77.82 ரூபாய் ஆகும்.
பெட்ரோல் விலை குறித்து உயர் நீதிமன்றம் கருத்து
மற்ற இந்திய பெருநகரங்கள் மற்றும் தலை நகரங்களைக் காட்டிலும் டெல்லியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு. அதே போல் மும்பையில் அதிகமாக இருப்பதற்கு காரணம் விற்பனை வரி மற்றும் வாட் வரி ஆகும்.
டெல்லி உயர் நீதிமன்றம் புதன் கிழமை அன்று “பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தால் உருவாவது. இதில் மத்திய அரசோ நீதிமன்றங்களோ தீர்வினை கூற இயலாது” என்று கூறியுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை கண்டித்து காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் பாரத் பந்தினை நடத்தியது குறிப்பிடத்தக்கது.