பெட்ரோல் பங்குகள், மால்களை மூடி போராட்டம்: விவசாய அமைப்புகள் எச்சரிக்கை

ஜனவரி 4ம் தேதி எடுக்கப்படும் முடிவுகள் திருப்தியாக இல்லை என்றால், போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ட்ராக்டர் ஊர்வலம் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என்று கூறியுள்ளனர்.

Will shut malls petrol pumps if Jan 4 talks fail warn farmers

Anju Agnihotri Chaba

Will shut malls, petrol pumps if Jan 4 talks fail, warn farmers : அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அன்று விவசாய சங்கங்கள் தங்களின் முக்கிய கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது போன்றவற்றை நிறைவேற்றவில்லை என்றால் ஹரியானாவில் மால்கள் மற்றும் பெட்ரோல் பம்புகள் ஆகியவை மூடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், விவசாய சங்கங்களும் மத்திய அரசும் சில முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்பட்ட மின்சார கட்டண உயர்வு மற்றும் வைக்கோல்போர் எரித்தல் போன்றவற்றில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. இருப்பினும் இரண்டு தரப்பிலும் எம்.எஸ்.பி. மற்றும் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தல் போன்றவற்றில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

சிங்கு எல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விவசாய சங்கத்தினர், தாங்கள் எழுப்பிய பிரச்சனைகளில் வெறு 5% மட்டுமே இதுவரை ஆலோசனை கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர். மேலும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், குடியரசு தினம் கொண்டாட்டங்கள் குறித்து அறிவிக்க சில தினங்களே இருக்கின்ற நிலையில், இந்த மாதம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு எடுத்துள்ளாதாக கூறியுள்ளனர்.

விவசாய சங்க தலைவர் யுத்வீர் சிங், மத்திய அரசு, இந்த போராட்டமும் சாஹீன்பாக் போராட்டம் போல் மாறிவிடும் என்று நினைத்தால் அது தவறு. சாஹீன்பாக் போன்று எங்களை இந்த இடத்தில் இருந்து நீக்கிவிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து இந்திய கிஷான் சங்கர்ஷ் கூட்டுறவு கமிட்டி (The All Indian Kisan Sangharsh Coordination Committee (AIKSCC)) வெளியிட்ட அறிக்கையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் புத்திஜீவிகள் தான் சமரசம் குறித்து விவாதிக்கின்றார்கள். ஆனால் விவசாயிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம். விவசாய சந்தைகள், விவசாய செயல்முறைகள், விவசாய நிலங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரும் இந்த சட்டங்களை ராத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இரண்டு சிறிய பிரச்சனைகளை ஏற்றுக் கொள்வதாக கூறி அரசு தன்னுடைய பிடிவாத நிலையை மறைக்க நினைப்பது தெளிவாக தெரிகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், 40 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்த அமைப்பான சம்க்யுக்த் கிஷான் மோர்ச்சா நடத்திய ஆலோலசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. விவசாய சங்கங்களின் முடிவுப்படி, ஜனவரி 4ம் தேதி எடுக்கப்படும் முடிவுகள் திருப்தியாக இல்லை என்றால், போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து ட்ராக்டர் ஊர்வலம் குந்த்லி – மனேசர் – பல்வால் எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என்று கூறியுள்ளனர். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூரில் நடைபெற்று வரும் போராட்டக்காரர்களை டெல்லி நோக்கி அழைக்கவும் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Will shut malls petrol pumps if jan 4 talks fail warn farmers

Next Story
இதை மட்டும் செய்யுங்க… உங்க ஆதார் கார்டை யாரும் ‘மிஸ் யூஸ்’ பண்ண முடியாது!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com