வந்தார் அபிநந்தன்: வாகா எல்லையில் வரவேற்பு- படங்கள்

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் இன்று வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

By: Updated: March 1, 2019, 10:02:07 PM

Wing Commander Abhinandan Release Today Live Updates : பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் இன்று வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது விடுதலையை இந்தியர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

அபிநந்தன் விடுதலையை, ‘அமைதி பேச்சுக்கான நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் குறிப்பிடுகிறது. இந்தியாவோ, ‘இது ஜெனிவா ஒப்பந்தம் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட நடவடிக்கை’ என குறிப்பிடுகிறது.

IAF Pilot wing commander AbhiNandan Varthaman release today

Wing Commander Abhinandan Release Today Live Updates

9:30 PM: இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் கபூர் கூறுகையில், ‘விங் கமாண்டர் அபிநந்தன் முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும்.’ என்றார்.

IAF Pilot wing commander AbhiNandan Varthaman release

9:14 PM: அபிநந்தன் பலத்த ராணுவ பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

IAF Pilot wing commander AbhiNandan Varthaman release today

8:55 PM: வாகா எல்லைக்கு வந்த அபிநந்தன் சற்று நேரத்தில் இந்திய பகுதியில் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்படைக்கும் நடைமுறைகள் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

IAF Pilot wing commander AbhiNandan Varthaman release today விடுதலை ஆன அபிநந்தன்

8:00 PM: பாகிஸ்தான் தளபதி ஆசிஃப் கபூர் தனது ட்விட்டர் பதிவில், ‘தற்காப்புக்காக பாகிஸ்தான் எந்த அளவுக்கும் ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்கும்’ என கூறியிருக்கிறார்.

6:55 PM: புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ‘இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தாயகம் திரும்பியதில் இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமையடைகிறேன். அபிநந்தனின் வீரம் பாராட்டுக்குரியது; கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது’ என்றார் அவர்.

IAF Pilot wing commander AbhiNandan Varthaman release today வாகா எல்லைக் காட்சி

6:30 PM: கன்னியாகுமரியில் அரசு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘மோடி எதிர்ப்பை சில கட்சிகள் நாடு எதிர்ப்பாக கையாளுகின்றன. பாதுகாப்பு படையினரின் பக்கம் நாட்டு மக்கள் நிற்கிறார்கள். ஆனால் சில கட்சிகள் இதில் சந்தேகம் எழுப்புகின்றன’ என்றார்.

05: 00PM :  தேசிய அளவில் ட்ரெண்டாகும் #WelcomeHomeAbhinandan , #Abhinandancomingback ஹேஷ்டேக்ஸ்.

04: 45PM :இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுடன்  பாகிஸ்தான் இராணுவ வாகனங்கள் வாகா  வந்தடைந்தனர்.

04: 30PM : வாகா எல்லை வந்தடைந்த வான் மகன் அபிநந்தனுக்கு அங்கு குவிந்திருந்த பொதுமக்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு.

02:45 PM : கொடியிறக்கும் நிகழ்ச்சிகள் வாகாவில் ரத்து

வாகா எல்லையில் இன்று, அபி நந்தனை வரவேற்க பொதுமக்கள் செய்த  ஏற்பாடுகளை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமிர்தசரஸ் துணை ஆணையர் ஷிவ் துலார் சிங் தில்லோன் இது குறித்து அறிவிக்கையில், இந்திய விமானப்படை அதிகாரிகள் வாகாவில் இருந்து விமானியை அழைத்துச் செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.

IAF Pilot wing commander Abhi Nandan Varthaman release today

02:20 PM : அபிநந்தன் மீது இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அபி நந்தனை விடுவிக்க உத்தரவிட்ட நிலையில் பாகிஸ்தானி ஒருவர் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் மண்ணில் ஒருவர் வெடிகுண்டு போட்டு நாட்டை அழிக்க வந்துள்ளார் அவரை எப்படி விடுவிக்க இயலும் என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை விசாரிக்க ஒத்துக் கொண்டது இஸ்லமபாத் நீதிமன்றம். இந்த மனுவை இஸ்லமபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அத்தார் மின்ஹல்லா அமர்வு விசாரணை செய்கிறார்.

01:00 PM : மாலையுடன் காத்திருக்கும் இளைஞர்கள்

28 கிலோ மாலையுடன் அபிநந்தனுக்காக காத்திருக்கும் இளைஞர்கள். தற்போது விமானப்படை வீரர்கள் அட்டாரிக்கு விரைந்துள்ளனர். மாலை சரியாக 4 மணிக்கு வாகாவில் அனுப்பி வைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12:30 PM : இஸ்லமாபாத்தில் இருந்து லாகூர் புறப்பட்டார் அபிநந்தன்

இன்று பிற்பகல் அபிநந்தன் விடுதலை  செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறிய நிலையில் தற்போது இஸ்லமாபாத்தில் இருந்து லாகூருக்கு புறப்பட்டார் அபிநந்தன்.

11:50 AM : அபிநந்தன் பெற்றோருக்கு உற்சாக வரவேற்பு

வாகா எல்லையில் விடுதலையாக இருக்கும் அபிநந்தனை அழைத்து வர அபிநந்தனின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வாகா விரைந்தனர். அவர்களுக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கும் சக பயணிகள்.

11:30 AM : வாகா எல்லையில் அபியை வரவேற்க இந்தியர்கள் உற்சாகமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Abhinandan Release Today Live Updates Abhinandan Release Today Live Updates Abhinandan Release Today Live Updates

11:00 AM : கைது செய்யப்பட்ட அபிநந்தனை நேரில் அழைத்து வர சென்னையில் இருந்து அபிநந்தனின் குடும்பத்தினர் வாகா புறப்பட்டனர்.

மேலும் படிக்க : என் மகன் உண்மையான  வீரன் – சிம்ஹகுட்டி வர்த்தமான்

10:00 AM : நல்லெண்ண அடிப்படையில் விடுதலை

கைது செய்யப்பட்ட அபிநந்தனை ஜெனிவா ஒப்பந்தம் படி முறையான போர் கைதியாக நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில், அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

09:30 AM : புல்வாமா தாக்குதல்

பிப்ரவரி மாதம் 14ம் தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை சேர்ந்தவர் ஈடுபட்டார். அதில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். அதனைத் தொடர்ந்து இந்தியா பாலகோட் பகுதியில் அமைந்திருக்கும் அந்த தீவிரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவியது.

பின்பு, பாகிஸ்தான் தரப்பில் இரண்டு போர் விமானங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தன. அதில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. பின்பு இந்திய விமானம் பாகிஸ்தானிற்குள் சென்றது. அதில் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டது. அதன் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Wing commander abhinandan release today live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X