வங்கதேசத்தில் இருந்தும், மற்றும் அருகில் இருக்கும் இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்குள் நுழைபவர்களை தடுக்கும் வகையில் 1951ல் உருவாக்கப்பட்ட என்ஆர்சி அப்டேட் லிஸ்டை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது.
இந்த என்ஆர்சி தொடர்பாக பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ, டேட்டா ஆப்ரேட்டர்களுக்கு மிகவும் குறைந்த அளவு சம்பளம் கொடுத்ததது என்று அதில் பணிபுரிந்த எட்டு கான்ட்ராக்ட் ஊழியர்கள் தொழிலாளர் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தனர்.
ஆபரேட்டர்கள் மாதத்திற்கு சுமார் 5,000 ரூபாய் செலுத்தியுள்ளது விப்ரோ நிறுவனம். “திறமையான தொழிலாளிக்கு கிடைக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் என்ற அம்மாநில அரசால் வரைமுறைப் படுத்தப்பட்ட அளவைவிட மிகக் குறைவானதாகும்.
தொழிலாளர் ஆணையாளர் அலுவலகம் இதுகுறித்து விசாரிக்கும் போதுதான், அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சித் தகவலும் காத்திருந்தது. இந்தப் பணியை செய்ய முதலில் விப்ரோவிற்கு லைசென்ஸ் கூட இல்லை என்று.
இதனால், ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் 1970 கீழ் , உரிமம் இல்லாமல் என்ஆர்சி அப்டேட் லிஸ்டில் வேலைப்பாடுகள் செய்ததற்காக குவஹாத்தி முதணமி நீதிமன்றத்தில் தொழிலாளர் ஆணையாளர் விப்ரோ மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
ஆனால், விப்ரோ இதைப் பற்றித் தெரிவிக்கையில் "விப்ரோ ஒவ்வொரு அதிகார சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வர்த்தகம் செய்கிறது மேலும் தொழிலாளர் நடைமுறைகளில் நேர்மை மற்றும் நியாயமான கொள்கைகளை பின்பற்றுகிறது. ஆனால், தற்போது எழுப்பப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக விப்ரோ கருத்தும் தெரிவிக்கவில்லை.