காங்கிரஸ் பேரியக்கம் நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்த இயக்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை (செப்.18) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம்
இந்தத் தீர்மானம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் இது அதிகாரப்பூர்வ தீர்மானம் அல்ல. இதற்கிடையில் ஒருநாள் முன்னதாக சனிக்கிழமை (செப்.17) காங்கிரஸின் பிரதேச கமிட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
400 பிரதிநிதிகள் கொண்ட இந்தத் தீர்மானம் நிச்சயம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தீர்மானம், அடுத்த தலைவருக்கு மாநில மற்றும் தேர்தல் குழு தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்குகிறது.
கெலாட் தனிப்பட்ட விருப்பம்
இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுவர்னிம் சதுர்வேதி (Swarnim Chaturvedi), ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அசோக் கெலாட்டின் தனிப்பட்ட விருப்பம்.
அது கட்சி தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். காங்கிரஸில் இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் அடுத்த தலைவராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
மீண்டும் ராகுல் தலைவராக கோரிக்கை
இந்த நிலையில் அசோக் கெலாட், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அசோக் கெலாட் இந்தத் தீர்மானத்தை கொண்டுவந்தபோது, ராகுல் காந்தி தான் அடுத்த தலைவர்.
நான் சொல்வது சரிதானே எனக் கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் கைகளை கூப்பி ஆமோதித்துள்ளனர்.
உள்கட்சி பிரச்னை- சச்சின் பைலட்
ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையே பனிப்போர் நீடித்துவருகிறது. இவர்களுக்குள் 2020ஆம் ஆண்டு சண்டை ஏற்பட்டது.
பைலட் ஆதரவாளர்கள் அசோக் கெலாட்டுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் பைலட் முதலமைச்சராக வேண்டும் என வெளிப்படையாக அழைப்பு விடுத்தனர்.
முதலமைச்சர் பதவி
இதனால் கட்சி தலைவர் பதவியை ஏற்க அசோக் கெலாட் தயங்குகிறார் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் கட்சித் தலைவர் பதவியில் வெற்றிப் பெற்றால் முதலமைச்சர் பதவியை இழக்க நேரிடும்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களை நியமிக்கவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிப் பிரதிநிதிகளை நியமிக்கவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் அளித்து, பி.சி.சி. நிறைவேற்றிய தீர்மானங்கள், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்டி முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வருகிற 24ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.