Advertisment

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு; நிதிஷ் குமாருக்கு இரட்டை லாபம் கிடைத்தது எப்படி?

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள்: தேசிய அரங்கில் நிதிஷ் குமாரின் நிலையை உயர்த்துவது மட்டுமல்லாமல், மாநில அரசியலில் அவரது பலம் குறைந்துவிட்ட நேரத்தில் அவரது சமூக அடித்தளத்தை ஒன்றாக வைத்திருக்க உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Nitish Kumar

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

Deeptiman Tiwary

Advertisment

சமீப வாரங்களில் இந்தியக் கூட்டணியுடனான அவரது உறவுகள் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதால், நிதிஷ் குமார் எதிர்கட்சிகள் கூட்டணியிலிருந்து சற்று விலகி, அரசியல் முன்னுரிமையைத் தேடிக்கொண்டிருந்தார். திங்களன்று, மாநில ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவு வெளியானதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: With Bihar caste survey, how Nitish Kumar hit two targets in one fell swoop

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள், எந்தக் கட்சியும் அல்லது கூட்டணியும் புறக்கணிக்க முடியாத முக்கிய வாக்கு வங்கிகளான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஈ.பி.சி), யாதவ் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி) மற்றும் மகாதலித்கள் ஆகிய சமூகங்களிடம் நிதிஷ் குமார் தனது நிலையை வலுப்படுத்த உதவக்கூடும்.

தரவுகளின்படி, ஈ.பி.சி.,க்கள் 36.01% மக்கள்தொகையுடன் மிகப்பெரிய வாக்குத் தொகுதியாக உள்ளனர், அதைத் தொடர்ந்து 27.12% ஓ.பி.சி.,கள் உள்ளனர், அவர்களில் 14.26% யாதவர்கள், ஒற்றைப் பெரிய சமூகக் குழுவாக உள்ளனர். தரவுகளின்படி, தலித்துகள் பீகார் மக்கள்தொகையில் 19.65% உள்ளனர், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 15%ஐ விட அதிகம். EBC மற்றும் OBC தரவுகளில் பஸமாண்டா முஸ்லிம்களும் அடங்குவர்.

மக்கள்தொகையில் சுமார் 3% பேர் என்று கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்ட அவரது சொந்த சாதியான குர்மிகளின் போதிய எண்ணிக்கையை ஈடுசெய்யும் வகையில் EBC மற்றும் மகாதலித்களின் அரசியல் தொகுதிகளை உருவாக்கியவர் நிதிஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதல் பதவிக் காலத்திலேயே சாதித்த இந்த சமூகப் பொறியியல், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அரசியல் ரீதியாக நிதிஷ் குமாரை நல்ல நிலையில் வைத்திருந்தது. அவரது சமூக அடித்தளம் மீண்டும் விலகிச் செல்வதற்கான அறிகுறிகளைக் காட்டுவதால், ஜாதிவாரி கணக்கெடுப்பு அவரது சமூகத்தை ஒன்றாக வைத்திருக்க ஒரு பசையாக பயன்படுத்தப்படலாம்.

ராகுல் காந்தி இன்று நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார். ஆனால் நிதிஷ் குமார் அதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பி, அதைத் தொடர்ந்து அதிரடியாக, நீதிமன்றப் போராட்டம் நடத்தி, அதைச் செய்து முடித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் யாதவ் அல்லாத OBC களின் சாம்பியனாக, இது அவரை ஹிந்தி இதய பகுதிகளில் உள்ள மற்ற தலைவர்களை விட முன்னேறுகிறது. இந்தச் செய்தி பீகாரில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை, 2024 தேர்தலின் பின்னணியில் உத்திர பிரதேசத்திற்கும் பரவப் போகிறதுஎன்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

மூத்த தலைவர் ஒருவரின் கூற்றுப்படி, ஜூன் மாதம் பாட்னாவில் நடந்த முதல் இந்தியா கூட்டணிக் கூட்டத்தின் போது, ​​நிதிஷ் குமார், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட்டணியின் முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அந்த நேரத்தில் தொகுதி பங்கீட்டை முன்னிறுத்தியது, என்று அந்த தலைவர் கூறினார். "இறுதியில் அது சரத் பவாரின் வீட்டில் (கடந்த மாதம்) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது," என்று அவர் கூறினார்.

பீகாரின் ஜே.டி(யு) கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா, கணக்கெடுப்பு முடிவுகள் முதல்வரின் "முன்னோக்கிச் சிந்திக்கும் அணுகுமுறையை" நிரூபித்துள்ளன என்றார்.

"அரசியல் சொல்லாடல்களைப் பொருட்படுத்தாமல், பல்வேறு சாதிகள் மற்றும் வர்க்கங்களின் பல்வேறு தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த கண்டுபிடிப்புகள் ஒரு முக்கிய கருவியாக செயல்படும் என்பதே உண்மை. பீகாரில், தனிப்பயனாக்கப்பட்ட கொள்கைகள் மூலம் குறிப்பிட்ட மக்களை இலக்காக கொண்ட செயல்பாடுகள் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தியுள்ளன. இதற்கு வழி வகுத்ததற்காக எங்கள் தலைவரை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் 2024 ஆம் ஆண்டில் எங்கள் அரசாங்கம் மத்தியில் அதிகாரம் பெற்றால், இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துவோம்,” என்று சஞ்சய் குமார் ஜா கூறினார்.

மாநிலத்தில் நிதிஷ் குமாரின் பலம் குறைந்து வருவதால், கணக்கெடுப்பு தரவுகளின் வெளியீடு முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜே.டி(யு)-பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றாலும், 2015 தேர்தலில் 71 தொகுதிகளில் இருந்த நிதிஷ் குமார் கட்சியின் எண்ணிக்கை 43 ஆக சரிந்தது. 74 இடங்களைப் பெற்ற பா.ஜ.க கூட்டணியில் பெரிய கட்சியாக மாறியது. இப்போது 75 தொகுதிகளைக் கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் (RJD), அதன் கூட்டணி கட்சியை விட மிகக் குறைவான இடங்களுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.

மாநிலத்தில் நிதிஷ் குமாரின் அரசியல் முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையிலும், அவர் 5-7% வாக்குகளுக்கு இடையில், முழுவதுமாக அவரின் சொந்த பலத்தில் தொடர்ந்து தனித்து நிற்கிறார். அவர் எந்த பக்கம் சென்றாலும் அந்த கூட்டணிக்கு கணிசமான பலன் கிடைக்கும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பலன் இயல்பாகவே அவருக்கு கிடைக்கும், அது அவருடைய முக்கியத்துவத்தை உயர்த்தவும் கூடும். ஆனால் இந்த தேர்தல் ஜாதிவாரி கணக்கெடுப்பை மட்டும் நம்பியிருக்காது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தான் முக்கிய பிரச்சனைகள்என்று ஆர்.ஜே.டி தலைவர் ஒருவர் கூறினார்.

பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, “இந்த முடிவு எடுக்கப்பட்டபோது நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தோம். இது உண்மையில் எங்கள் குழந்தை. மாறாக, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில், ஆர்.ஜே.டி.,யின் வரலாற்றுப் பங்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியும்,” என்று கூறினார்.

அரசியல் கட்சிகள் எப்போதும் தங்கள் உள் கணக்கீடுகளில் ஒரே மாதிரியான எண்ணிக்கைகளுடன் ஜாதிகளை கணக்கிட்டு வருவதால், கணக்கெடுப்பு முடிவுகள் எந்த ஆச்சரியமான தரவுகளையும் வெளியிடவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இப்போதைக்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்கள் மத்தியில் ஒரு பெரிய விஷயம் இல்லை. OBC மற்றும் EBC களுக்கு அதிக இடஒதுக்கீடு கோரி அரசியல் ரீதியாக இது பயன்படுத்தப்படலாம். அது தேர்தல் பிரச்சினையாக மாறலாம். பீகாரில், பஞ்சாயத்து தேர்தல்களில் EBC களுக்கு 20% இட ஒதுக்கீடு உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம், இதற்கு பா.ஜ.க.,வும் ஆதரவளிக்கிறது. அரசியல் ரீதியாக எப்படி இருக்க வேண்டும் என்பது நிதிஷ் குமாருக்கு எப்போதுமே தெரியும் என்பதை காட்டுவது தான் இந்த கணக்கெடுப்பு,” என்று அந்த பா.ஜ.க தலைவர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு போலல்லாமல், நிதிஷ் குமார் தற்போது இந்திய கூட்டணியில் முதன்மையானவர்களில் இல்லை, மேலும் ராகுல் காந்தி வரக்கூடிய முக்கியமான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய பிரச்சினையாக மாற்றியுள்ளார். தாமதமாக, இந்திய கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய விஷயங்களில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாறுப்பட்ட வழிகளை எடுத்துள்ளார். ஆனால், கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் எதிர்கட்சிக் கூட்டணியில் தன்னைத் திரும்ப முன்னிறுத்தி, அவரது தொடர்ச்சியான அரசியல் பொருத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nitish Kumar Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment