பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு கெய்ரோவில் இருந்து புது தில்லிக்கு புறப்பட்டார்.
இருதரப்பு கூட்டுறவை மேம்படுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியும் மோடிக்கு நாட்டின் உயரிய அரச விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.
முன்னதாக, எகிப்து சென்றுள்ள மோடியை எல்-சிசி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றார், அங்கு இரு தலைவர்களும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசினர். இந்தியாவின் தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்ட கெய்ரோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 11ஆம் நூற்றாண்டின் அல்-ஹக்கிம் மசூதியையும் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
பின்னர் கெய்ரோவின் ஹெலியோபோலிஸ் போர் கல்லறையில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
26 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் இருதரப்புப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். மோடி தனது முதல் எகிப்து பயணத்தின்போது, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பூலியுடன் கலந்துரையாடினார்.
மோடியுடனான சந்திப்பில் மட்பூலி தலைமையிலான 7 எகிப்திய அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவுடனான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக மார்ச் மாதம் ஜனாதிபதி எல்-சிசியால் அமைக்கப்பட்ட உயர்மட்ட அமைச்சர்கள் குழுவான இந்திய யூனிட்டுடனான சந்திப்பு இதுவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“