ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் என்.ஜி.ஓ அமைப்பான ராஷ்டிரிய சேவா பாரதி, என்.ஜி.ஓ-க்களுக்கான மாநாட்டை ஜெய்பூரில் நடத்த உள்ளது. இந்த மாநாடு ஏப்ரல் 7 முதல் 9 வரை நடைபெறுகிறது. சங்பரிவார் அமைப்புகளின் மிகப்பெரிய கூட்டமாக இருக்கும். இந்த நிகழ்வை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் துவக்கி வைக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தாத்தாதெரி ஹாஸ்சபிள் நன்றி உரை நிகழ்த்துகிறார்.
இந்தியாவின் என்.ஜி.ஓக்கள் இடதுசாரி சித்தாந்தம் கொண்ட என்.ஜி.ஓக்களாக இருக்கிறது என்றும் இடதுசாரி சித்தாம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதால் என்.ஜி.ஓக்களை வலதுசாரி சித்தாந்தத்தில் மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவின் கலாச்சார அம்சங்களை முன்னிறுத்தும் வகையில் இந்த என்.ஜி.ஓக்கள் மாற்றமடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்படும் என்.ஜி.ஓக்களுக்கு கடுமையாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் என்.ஜி.ஓக்களுக்கு கிடைக்கும் நிதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் என்.ஜி.ஓக்களின் செயல்பாடு சுருங்கி உள்ளது.
சங்பரிவார்கள் , தற்போது ஆர்.எஸ்.எஸ்-யின் என்.ஜி.ஓ வான ஆர்.எஸ்.பி அமைப்பு 1000 என்.ஜி.ஓ-க்களை உதவு செய்கிறது. கொரோனா காலத்தின்போது இதுபோன்ற அமைப்புகள் சமூக சேவையில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.பி-யின் இந்த செயல்பாடுகளால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான நல்ல பார்வையை மக்களிடத்தில் கட்டமைக்க முயல்கிறது.
ஆர்.எஸ்.பி அமைப்பு 1980-களில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலசாகிப் தேவ்ரஸ் என்பவரின் முன்னெடுப்பால இது தொடங்கப்பட்டது. சங் பரிவார்களின் , சமூக சேவையை ஒரு அமைப்பு மூலம் முழுமைப்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. மருத்துவம், கல்வி , ஆராய்ச்சி, ஆய்வு செய்வது என்று எல்லா இடத்திலும் இந்த அமைப்பு உதவி வழங்குகிறது.
இந்த மாநாட்டை பொறுத்தவரை 100 என்.ஜி.யோக்களை சேர்ந்த 500 பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். இதை ராஷ்ட்ரிய சேவ சங்கம் என்று அழைக்கிறார்கள்.
இந்நிலையில் ஆர்.எஸ்.பி அமைப்பின் தலைவர் பன்னாலால் பன்சாலி கூறுகையில் , ‘ கடந்த ஒரு வருடத்திற்குள் 25 ஆயிரம் இளைஞரக்ளுக்கு இந்த அமைப்பு வேலை வழங்கியுள்ளது. கிட்டதட்ட 43,045 சமூகம் நல திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம். சமத்துவம், அனைவருக்கும் வேலை என்பதை அடைய பயிற்சிகள் வழங்கப்படும். இளைஞர்கள் மற்றவர்களிடம் வேலை தேடாமல் சுயமாக தொழில் செய்து வாழ வேண்டும் என்பதுதான் சங்பரிவாரின் முக்கிய நோக்கம் “ என்று அவர் கூறினார்.