ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் பலேனோ கார் விபத்தில் சிக்கிய பெண் சக்கரங்களில் சிக்கி நான்கு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பின்னர் பெண்ணின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.
டி.சி.பி (வெளிப்புற டெல்லி) ஹரேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால் அவரது ஆடைகள் கிழிந்து இருந்ததாகவும், அதன் விளைவாக உடல் நிர்வாணமாக காணப்பட்டதாகவும் கூறினார்.
அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
“ரோகினி மாவட்டத்தில் உள்ள கஞ்சவாலா காவல் நிலையத்தில் அதிகாலை 3.24 மணியளவில் PCR அழைப்பு வந்தது. சாம்பல் நிற பலேனோ காரில் உடலைக் கட்டி இழுத்துச் செல்வதாக அழைப்பாளர் கூறினார். அழைப்பாளரால் பதிவு எண்ணின் ஒரு பகுதியைக் கொடுக்க முடிந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது மற்றும் வாகனத்தைத் தேடுவதற்கான செய்தி ஒளிரப்பட்டது. அதிகாலை 4.11 மணியளவில், ஒரு பெண்ணின் சடலம் சாலையில் கிடப்பதாக கஞ்சவாலா காவல் நிலையத்திற்கு மீண்டும் ஒரு PCR அழைப்பு வந்தது. உடல் மங்கோல்புரியில் உள்ள எஸ்.ஜி.எம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது” என்று டி.சி.பி சிங் கூறினார்.
“முதலில் கார் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் விசாரணையின் போது, வாகனத்தில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். சுல்தான்புரி பகுதியில் கார் விபத்துக்குள்ளானதாக அவர்கள் தெரிவித்தனர். ஒரு ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதை அப்பகுதியின் SHO கவனித்துள்ளார், மேலும் இந்த தகவல் அதிகாலை 3.53 மணியளவில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த ஸ்கூட்டர் அந்த பெண்ணுக்கு சொந்தமானது. விபத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் சக்கரங்களில் சிக்கி, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது ஸ்பாட் ஆய்வில் தெரியவந்தது, ”என்று டி.சி.பி கூறினார்.
கிராமின் சேவா ஆட்டோ ஓட்டும் தீபக் கண்ணா (26); உத்தம் நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் அமித் கண்ணா (25); சிபியில் உள்ள ஸ்பானிஷ் கலாச்சார மையத்தில் பணிபுரியும் கிரிஷன் (27); சலூனில் முடி திருத்தும் வேலை செய்யும் மிதுன் (26), சுல்தான்புரியில் ரேஷன் வியாபாரம் செய்யும் மனோஜ் மிட்டல் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பகுதி நேரமாக பணிபுரிந்ததாகவும், இதுபோன்ற ஒரு நிகழ்வில் இருந்து வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil