சபரிமலை சென்ற பெண்ணை தாக்கிய மாமியார்... காவல் நிலையத்தில் புகார்...

கலவரம் நடந்த போதும் கூட காவல் துறை, இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்

Woman entered Sabarimala temple facing trouble : இந்த மாதம் இரண்டாம் தேதி மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த பிந்து மற்றும் கனக துர்கா என்ற இரண்டு பெண்கள், சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி, பெண்கள் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு நடுத்த சரிசமமான உரிமை பெற்றுள்ளனர். ஆனாலும், இவர்கள் கோவிலுக்கு சென்று வந்த பின்பு, ஐந்தாவது முறையாக கேரளத்தில் மிகப் பெரிய கடையடைப்பு மற்றும் கலவரங்கள் நடைபெற்றன.

Woman entered Sabarimala temple facing trouble – மாமியார் மீது புகார்

அதனை பின் தொடர்ந்து, இந்த இரண்டு பெண்களுக்கும் பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அவர்கள் கொச்சினில் அரசு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டனர். சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் இரண்டு வாரத்திற்கும் மேலாக அவதிப்பட்டு வந்தனர் அந்த பெண்கள்.

இந்நிலையில் கனகதுர்கா மற்றும் பிந்து இன்று அதிகாலை தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அப்போது, மலப்புரத்தில் இருக்கும் தன்னுடைய இல்லத்திற்கு சென்றிருக்கிறார் கனக துர்கா. சபரிமலைக்கு சென்று திரும்பியதால், அதிருப்தியில் இருந்த கனக துர்காவின் கணவர் குடும்பத்தினர் அவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய மாமியார் தன்னை பெரிய தடியால் தாக்கியதாக, மலப்புரம், பெரிந்தல்மன்னா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருடைய மாமியார் மீது ஐ.பி.சி. 341 மற்றும் 324ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல் துறையினர். சபரிமலைக்கு செல்லக் கூடாது என்று கனக துர்காவின் கணவர் வீட்டார், அவருடைய செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கலவரம் நடந்த போதும் கூட காவல் துறை, இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சபரிமலையைத் தொடர்ந்து அகத்தியர் கூடம் செல்லும் பெண்கள்… நூறுபேர் குழுவில் ஒரே ஒரு பெண்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close