டெல்லி விமான நிலையத்தில் பெண் ஒருவர் தூக்கி எறிந்த பவர் பேங்க் வெடிக்குண்டு போல் வெடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாளவிகா திவாரி என்ற பெண் டெல்லியிலிருந்து இமாச்சல பிரதேசம் செல்ல, விமான நிலையம் சென்றடைந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய கைப்பில் பவர் பேங்க் இருப்பதை பார்த்த அதிகாரிகள், பயணத்தின் போது பவர் பேங்க்கை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் அந்த பெண் கண்டிப்பாக பவர் பேங்கை எடுத்து செல்ல வேண்டும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும் விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அத்ற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண், ஆத்திரத்தில் பவர் பேங்கை எடுத்து அதிகாரிகள் மீது வீசினார். தவறி அந்த பவர் பேங்க் சுவரில் இடித்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. பவர் பேங்க் வெடித்ததில் அதிகளவில் புகையும் பரவ தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர்.
வெடிபொருட்களுடன் விளையாடுதல், மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட சட்டங்களில் அந்த பெண் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது டெல்லி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.