கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் தனியார் மருத்துவமனையில் புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாயை செவிலியர் போல் நடித்து கொலை செய்ய முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாயின் குளுகோஸில் நரம்பு மூலம் காற்றைச் செலுத்தி, அபாயகரமான ஏர் எம்போலிசத்தை ஏற்படுத்தி கொலை செய்து முயன்றுள்ளார்.
பத்தனம்திட்டா மாவட்டம், பருமலா என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக் கிழமை மாலை இச்சம்பவம் நடந்ததுள்ளது. மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் அனுஷா (30) செவிலியர் உடை அணிந்து தாயின் அறைக்கு சென்று கொலை செய்யும் நோக்கில் கையில் குளுகோஸ் செல்லும் நரம்பில் வெற்று சிரிஞ்ச் கொண்டு 3 முறை காற்றை செலுத்த முயன்றுள்ளார்.
பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்வப்னில் எம். மகாஜன் கூறுகையில், அனுஷா, குழந்தையின் தாய் சினேகாவின்(25) கணவருடன் உறவில் ஈடுபட விரும்பியதாகவும், அவரை கல்லூரி நாட்களில் இருந்தே தெரிந்தவர் என்றும், இதனால் சினேகாவை அனுஷா கொல்ல திட்டமிட்டதாகவும் கூறினார்.
ஏர் எம்போலிசம் என்பது ரத்தக் குழாயில் (Air embolism) ஏர் பப்பில்ஸ் (Air bubbles) ஏற்படுத்தி ரத்த ஓட்டம் தடைபட்டு ரத்த விநியோகத்தில் ஏற்படும் அடைப்பு ஆகும். ரத்த ஓட்ட அமைப்பில் காற்று நுழைந்தால் அது ஆபத்தானது என்ற அறிந்த அனுஷா இந்த செயலில் ஈடுபட்டதாக மகாஜன் கூறினார்.
சினேகாவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவர் அங்கு தங்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மதியம், அவர் மருத்துவமனையில் தனது அறையில் இருந்தபோது, அனுஷா செவிலியர் உடை அணிந்து சினேகாவுக்கு ஊசி போட முயன்றுள்ளார். சினேகாவின் நரம்புக்குள் மூன்று முறை காற்று ஊசி போட முயன்றுள்ளார்.
சினேகா ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்ததால் இது குறித்து சந்தேகம் அடைந்தார். செவிலியர் போல் உடை அணிந்து வந்த அனுஷாவிடம் கேட்டுள்ளார். உடனே அனுஷா ஊசி போட கட்டாயப்படுத்தியதால் சினேகாவும் அவர் உறவினரும் அங்கிருந்த அலாரத்தை அடிக்க செய்தனர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வந்து அனுஷாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அனுஷா மீது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 419 (ஆளுமை மூலம் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். வெள்ளிக் கிழமை மருத்துவமனைக்குச் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அனுஷா உள்ளூர் மருந்துக் கடையில் இருந்து ஒரு சிரிஞ்ச் வாங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாஜிஸ்திரேட் முன் அனுஷா ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் போலீசார் கூறுகையில், அனுஷாவின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து திருவல்லா துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அர்ஷத் கூறுகையில், “அனுஷா தனது கணவருடன் பேசிவிட்டு சினேகா மற்றும் அவரது குழந்தையை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் அவரின் கணவரின் தொடர்பு குறித்து எவ்வித ஆதராமும் எங்களுக்கு கிடைக்கவில்லை" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"