ஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் 11 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Advertisment
ஹைதராபாத்தின் மாதப்பூர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வந்தவர் ஸ்ர்வானி. 27 வயதாகும் இவருக்கு 1 வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரவச விடுமுறைக்கு பின்பு சமீபத்தில் தான் ஸ்ர்வானி வேலையில் சேர்ந்தார்.
இந்நிலையில், நேற்று(28.6.18) காலை தனது கணவன் மற்று குடும்பத்தாரிடம் வேலையை விட்டுவிட முடிவு எடுத்திருப்பதாகவும், இனிமேல் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.இதற்கு ஸ்ர்வனின் கணவர் ராமகிருஷணன் மாலை வீடு திரும்பியதும் இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம் என்றூ கூறி , ஸ்ர்வனியை சமாதானப்படுத்தி அவரை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், காலை அலுவலகத்திற்கு சென்ற அவர், 11 மணியளவில் அலுவலகத்தின் 11 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். 11 ஆவது மாடியின் மேல் தளத்தில் இருந்து அவர் தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. ஸ்ர்வனின் தற்கொலைக்கு அலுவலகத்தில் தந்த அதிக பணிசுமையே காரணம் என்ற தகவலும் பரவி வருகிறது. அதே நேரத்தில் ஸ்ர்வனின் உடல்நிலை பிரசவத்திற்கு பிறகு மோசமானதாகவும், அவர் தொடர்ந்து கடுமையான தலைவலி மற்றும் வயிற்றுவலியாக அவதிப்பட்டு வந்ததால் தான் தற்கொலைக்கு முடிவுக்கு சென்றதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Advertisment
Advertisements
தனது மனைவியின் தற்கொலை செய்தியைக் கேட்டு நேரில் வந்த ஸ்ர்வனின் கணவர் ராமகிருஷ்ணன், கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. தற்கொலை செய்துக் கொண்ட ஸ்ர்வனின் உடலை கைப்பற்றி காவல் துறையின் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.