தனது தற்கொலையை பேஸ்புக்கில் லைவ் அடித்த பெண்...பார்த்து பதறிய காதலன்

மேற்கு வங்காளத்தில் இளம்பெண் ஒருவர் தனது தற்கொலையை முகநூலில் லைவ் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளம், பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தெற்கு 24 பகுதியில் வசிக்கும் 18 வயதான இளம்பெண் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 12ம் வகுப்பில் படிக்கும் மாணவியான இந்தப் பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தான் தற்கொலை செய்துவிடுவேன் எனக் காதலனிடம் கூறியுள்ளார். வாக்குவாதம் தொடர்ந்ததால், மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இவர் எடுத்த இந்த விபரீத முடிவைத் தனது காதலனும் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக்கில் லைவ் பதிவு செய்துள்ளார். நீண்ட நேரமாக லைட் காட்சி சென்றுள்ளது. இதில் அப்பெண், அறையில் உள்ள சீலிங் ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். காதலியின் தற்கொலை சம்பவத்தை லைவ் வீடியோவில் பார்த்த காதலன் பதறியுள்ளார். பதற்றத்தில் கதறி அழுதுள்ளார். மேலும் இதனைப் பெண்ணுடன் முகநூலில் நண்பர்களாக இருக்கும் பலரும் பார்த்துப் பயந்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாய் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மாலை 6.30 மணிக்கெல்லாம் மருத்துவமனை சென்றுள்ளார். தந்தை மற்றும் சகோதரன் உடன் இல்லாததால், இரவு முழுவதும் தனியாக இருந்துள்ளார் அப்பெண். காலை ஞாயிறு என்பதால் 8.30 மணியாகியும் மகள் கதவை திறக்காததால் ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்துள்ளார் தாய். அப்போது அறையில் ஃபேனில் இருந்து மகள் சடலமாக தொங்கும் காட்சியை பார்த்துக் கதறி அழுதார்.

இந்த வழக்கைப் பதிவு செய்த போலீசார், அப்பெண் காதலித்த நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

×Close
×Close