கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சனிக்கிழமை இரவு பாலியல் வண்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சனிக்கிழமை இரவு பாலியல் வண்புணர்வு செய்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.ஜி.சைமன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவ்ஃபால் கைது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நவ்ஃபால் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நவ்ஃபால் மாநில சுகாதாரத் துறையின் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இருந்து வந்தார். 2019ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் அவர் ஒரு குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவ்ஃபால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸை ஆளில்லாத மைதானத்திற்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் வண்புணர்வு செய்ததாக எஸ்.பி கூறினார். மருத்துவமனையை அடைந்ததும், அந்த பெண் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகின்ற கோவிட் அமருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிறப்பு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"