வெளிநாடு தப்பிச் சென்றாரா நித்தியானந்தா? காணாமல் போன அந்த இரண்டு பெண்கள் எங்கே?

டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தை ஆசிரம பயன்பாட்டிற்கு அளித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிப்பு!

By: Updated: November 22, 2019, 08:44:15 AM

Women abduction case against Nithyananda : கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஜனர்தன ஷர்மா. அவருடைய வயது 48. இவருக்கு 4 குழந்தைகள். நால்வரையும் கர்நாடகாவில் இருந்த நித்தியானந்தா தியான பீடம் பள்ளியில் 2013ம் ஆண்டு சேர்த்தார். பெங்களூருவில் இருந்து ஆன்மிக கல்வி கற்று வந்த அந்த 4 பெண் குழந்தைகளும், பெற்றோர்களின் அனுமதி ஏதுமின்றி குஜராத்தில் இருக்கும் யோகினி சர்வாக்யபீடத்திற்கு அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் அந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

நவம்பர் 1ம் தேதி ஷர்மா மற்றும் அவருடைய மனைவி தன்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று ஆசிரம நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி குஜராத் மாநில குழந்தைகள் நலன் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் ஒன்றை சமர்பித்தார். அதனைத் தொடர்ந்ந்து காவல்துறை ஆசிரமத்திற்குள் சென்று ஷர்மா தம்பதியினரின் இளைய குழந்தைகள் இருவரையும் மீட்டுள்ளனர். இவ்விரு நபர்களும் மைனர்கள். ஆனால் ஷர்மா தம்பதிகளின் மூத்த மகளான லோபமுத்ரா (21) மற்றும் நந்தித்தா இருவரையும் ஆசிரம வளாகத்தில் சிறைபிடித்துள்ளனர் என்றும் புகார் அளித்திருந்தார் ஷர்மா. ஆனால் ஆசிரமத்துக்குள் இல்லை.

நவம்பர் 17ம் தேதி இரவு நித்தியானந்தா மற்றும் ஆசிரமத்தின் இரண்டு மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விவேகானந்தா நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நந்தித்தாவை ஸ்கைப் கால் மூலம் தொடர்பு கொண்டது காவல்துறை. ஒரு முக்கியமான வேலை காரணமாக வெளியே சென்றிருப்பதாகவும். வேலை முடிந்தவுடன் நானே திரும்பி வருகின்றேன் என்றும் கூறியுள்ளார். காவல்துறையினர் நந்தித்தாவின் ஸ்கைப் கால் மூலமாக அவரின் இருப்பிடத்தை அறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: ‘Abduction’ of women: Gujarat HC notices to Nithyananda, police; ashram managers held

நவம்பர் 17ம் தேதி முதல் தகவல் அறிக்கை ஹத்திஜன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அப்போது லோபமுத்ரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் கரீபியன் தீவுகளில் அமைந்திருக்கும் ட்ரினிடாட் நாட்டில் தன் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாக அறிவித்தார். இது குறித்து டிவிசன் பெஞ்ச் நடத்திய விசாரணையின் போது மேஜர் பெண்களுக்கு கஸ்டடி கேட்பது ஏன் என்று கேள்வி எழுப்பட்டது. அப்போது வழக்கறிஞர் ப்ரிதேஷ் ஷா “ஷர்மாவின் 4 குழந்தைகளும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் புஷ்பக் சொசைட்டியில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் 2 வாரத்திற்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

குஜராத் டிஜிபி, அகமதாபாத் எஸ்.பி, விவேகானந்தா காவல் நிலைய இன்ஸ்பெக்டர், நித்தியானந்தா, நிர்பேதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. புதன்கிழமை காலையில் ஆசிரமத்தின் மேலாளர்களான ப்ரான்பிரியா மற்றும் பிரியாதத்வா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 364, 344, 323, 504, 506(2) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட அவர்களுக்கு 5 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர் கைது

சட்டத்திற்கு புறம்பாக பெண்களை அடைத்து வைத்திருப்பது தொடர்பாக நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் முறையாக ஆசிரமம் நடத்த அனுமதி அளித்த பள்லி முதல்வர் ஹிதேஷ் பூரி கைது செய்யப்பட்டார். அரசு ஊழியராக இருந்து கொண்டு தன்னுடைய பதவியை துஷ்ப்ர்யோகம் செய்தது மற்றும் காவல் துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்படாமல் பள்ளி வளாகத்தில் ஆசிரமம் செயல்பட அனுமதி அளித்தது ஆகிய காராணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார். விவேகானந்தா நகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்ட போது, எப்போதிருந்து பள்ளி வளாகம் ஆசிரமத்திற்காக வழங்கப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 188ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அது பெய்லபில் அஃபென்ஸ் என்பதால் அவர் ஜாமீன் பெற்று வீடுதிரும்பினார்.

Read more : Nithyananda case: DPS principal arrested for giving land to ashram without permission

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Women abduction case against nithyananda he has fled country after gujarat hc noticed to him

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X