2005-ம் ஆண்டுக்கு முன்பே பிறந்த பெண்களுக்கும் குடும்பச்சொத்தில் பங்கு உண்டு – சுப்ரீம் கோர்ட்

2005-ம் ஆண்டுக்கு முன்பே பிறந்து இருந்தாலும், பெண்களுக்கு குடும்பச்சொத்தில் பங்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

By: Published: February 4, 2018, 10:10:57 AM

2005-ம் ஆண்டுக்கு முன்பே பிறந்து இருந்தாலும், பெண்களுக்கு குடும்பச்சொத்தில் பங்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குடும்பச்சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கி மத்திய அரசு 2005-ம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டத்தை திருத்தியது. இந்த நிலையில் 2005-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்கள், குடும்பச்சொத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்று கோரி வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சென்றும், அவர்கள் சார்பாக தீர்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து, அந்த பெண்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அவர்களது வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், 2005-ம் ஆண்டுக்கு முன்பே பிறந்து இருந்தாலும், பெண்களுக்கு குடும்பச்சொத்தில் பங்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கினர்.

தீர்ப்பில் நீதிபதிகள், “பிரிக்கப்படாத குடும்பச் சொத்தில் பிறப்பு முதலே ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உண்டு என்று சட்டம் நிர்ணயித்து உள்ளது. எனவே அந்த சட்டம் இயற்றுவதற்கு முன்பே பிறந்து விட்டார்கள் என்று காரணம் கூறி குடும்பச்சொத்தில் பெண்களுக்கு சம பங்கை நிராகரிக்க கூடாது. இந்த சட்டம், 2005-ம் ஆண்டுக்கு முன்பாக சொத்து தொடர்பாக வழக்குகளை தொடுத்தவர்கள் அனைவருக்கும் பொருந்தும்” என கூறி உள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Women born before 2005 too have right to ancestral assets says supreme court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X