இஸ்ரோவைச் சேர்ந்த 200 பெண் விஞ்ஞானிகள் இந்த வார தொடக்கத்தில் மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் அமைச்சரிடம் செல்ஃபி எடுக்க விரும்பினர். இதையடுத்து அமைச்சர் கூறுகையில், நான் தான் உங்களிடம் செல்ஃபி எடுக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் பிரபலங்கள். சந்திரயான் -3, ஆதித்யா-எல் 1 மற்றும் சந்திரயான் -2 போன்ற பணிகளைச் செய்ததற்காக நான் தான் உங்களிடம் செல்ஃபி எடுக்க கேட்க வேண்டும் என்று கூறினார்.
கடினமான பணி
ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தில், இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மேடையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாகப் பாராட்டினார். பார்வையாளர்களிடமிருந்து தனித்தனியாக கைதட்டல் எழுந்தது. சிறிது நேரம் கழித்து தொடக்க உரையை ஆற்றிய பிரதமர், இ-கோர்ட்ஸ் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு தனது அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, இரண்டாம் கட்டத்துடன் ஒப்பிடும்போது நான்கு மடங்கு நிதியுதவி வழங்கியுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், இது உங்களுடைய விஷயம் என்பதால் நீங்கள் கைதட்டலாம் என்று பார்வையாளர்களிடம் கூறினார். அதேசமயம் மிஸ்ரா பேசும்போது நீங்கள் கைதட்டுவது எவ்வளவு கடினம் என்பதை நான் புரிந்துகொண்டேன் என்று கூறிய போது கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
ஜே.என்.யு தொடர்பு
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் ஒருவருக்கு ஜே.என்.யு தொடர்பு உள்ளது. ஆளுநருடன் நிதிஷ் மற்றும் 9 புதிய அமைச்சர்கள் இடம் பெற்ற குழு புகைப்படம் வெளியானது. அந்த படத்தில் இடது புறத்தில் கடைசியாக நிற்பவர் சுமித் சிங் என அடையாளம் காணப்பட்டார். அவர் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ ஆவார். சுமித் ஜே.என்.யு-ல் உள்ள கூல் ஆஃப் லாங்குவேஜஸில் உள்ள ஜப்பானிய மையத்தின் மாணவராக இருந்தவர் என்று கண்டறியப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/delhi-confidential/delhi-confidential-selfie-request-9132067/?tbref=hp
அவர் ஜே.என்.யுவில் படித்த போது ஏ.பி.வி.பியில் சேர்ந்தார், பின்னர் முழுநேரஅரசியலில் ஈடுபட பீகாருக்கு வந்தார். மூத்த ராஜ்புத் அரசியல்வாதி நரேந்திர சிங்கின் மகன் சுமித் 2020 சட்டமன்றத் தேர்தலில் ஜார்கண்ட் எல்லையில் உள்ள சகாய் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“