/tamil-ie/media/media_files/uploads/2023/03/army-2.jpg)
இன்னும் 2 ஆண்டுகளுக்குள், 40 பெண் ராணுவ அதிகாரிகள், உயர்நிலை பதவிகளுக்கு தேர்ச்சியடைவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த இரண்டு அல்லது 3 வருடங்களுக்குள் 40 பெண் ராணுவ அதிகாரிகள் கொலொனல் ( colonel) என்ற அடுத்தகட்ட பதவிகளுக்கு தேர்ச்சிபெற உள்ளனர்.
பெண் ராணுவ அதிகாரிகளை அடுத்தகட்ட உயர் பதவிகளுக்கு தேர்வு செய்யும் முறை தற்போது நடந்து வருகிறது. பெண்கள் ராணுவ அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக, பிரத்யேக தேர்வு குழு ராணுவத்தில் இருக்கிறது.
இந்த தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் வழிமுறை கடந்த மார்ச் 27 முதல் இன்றுவரை நடைபெறுகிறது. இந்நிலையில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கிட்டதட்ட 150 பணியிடங்கள் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2009 வரை முடித்த பெண் அதிகாரிகள் இதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.
244 பெண் அதிகாரிகளில், 108 பெண் அதிகாரிகள் கொலொனல் என்ற ரேங்கை அடைந்துவிட்டனர். 1992 முதல் 2006-ம் ஆண்டு வரை பயிற்சி முடித்தவர்களில், 108 பெண் அதிகாரிகள், ராணுவத்தின் பல்வேறு பிரிவின் உயர் பதவிகளில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் 2009-ம் ஆண்டு வரை பயிற்சி பெற்ற பெண் அதிகாரிகளில், 40 பேருக்கு கொலொனல் பதவி உயர்வு கிடைக்க உள்ளது. பெண்களை உயர் பதிகளுக்கு தேர்வு செய்யும்போது, ஒரு சிறப்பு குழு அவர்களை தேர்வு செய்யும். ஆண்களைப்போல பயிற்சியின்போது, பெண்களுக்கு பல்வேறு பிரிவுகளுக்கு தலைமை தாங்கும் பயிற்சி வழங்கப்படுவதில்லை.
இதனால் பெண்களை தேர்வு செய்ய சிறப்பு தேர்வு குழு அமைகப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு படையில், மருத்துவப் பிரிவின் அதிகாரியாக இருப்பது, ராணுவத்தின் கல்வி தொடர்பான பிரிவில் பெண்களுக்கு நிரந்தர பணி மற்றும் தலைமை தாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இதனால் பெண் ராணுவ அதிகாரிகளை ஆண்களோடு ஒப்பிடுவது சரியான நகர்வாக இருக்காது என்று அந்த உயர் அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us