சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) வெள்ளிக்கிழமை அறிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும் என்றும் நமது நாரி சக்திக்கு பயனளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, "இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும். சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களுக்கு ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கான மானியத்தை ரூ.200-லிருந்து ரூ.300-ஆக உயர்த்தியது. தொடர்ந்து இந்த மானிய திட்டம் வருகிற மார்ச் 31-ம் தேதி உடன் முடிவடையும் நிலையில் இது மேலும் ஓராண்டிற்கு நீடித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது.
தற்போது ரூ.100 குறைப்பின் மூலம் இதுவரை ரூ.918-க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.818-க்கு விற்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“