Advertisment

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி இல்லை – சோனியாவைச் சந்தித்த பின் அசோக் கெலாட் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அசோக் கெலாட் அறிவிப்பு; ராஜஸ்தான் நிகழ்வுகளுக்கு சோனியாவிடம் வருத்தம் தெரிவித்தாகவும் தகவல்

author-image
WebDesk
New Update
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி இல்லை – சோனியாவைச் சந்தித்த பின் அசோக் கெலாட் அறிவிப்பு

நடைபெற உள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வியாழக்கிழமை தெரிவித்தார். கட்சித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு அசோக் கெலாட் தனது முடிவைப் தெரிவித்தார்.

Advertisment

ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு அசோக் கெலாட் வேட்புமனு தாக்கல் செய்வாரா என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு வந்துள்ளது. திட்டமிடப்பட்ட சந்திப்பு நேரத்திற்கு முன்னதாக சோனியா காந்தியின் இல்லத்திற்கு அசோக் கெலாட் வந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், தான் எப்போதும் காங்கிரஸின் ஒழுக்கமான சிப்பாய் என்றும், ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறினார்.

“தீர்மானம் (கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்) நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது தார்மீகப் பொறுப்பாகும். எனவே இந்த சூழ்நிலையில் நான் (கட்சித் தலைவர்) தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். இது எனது முடிவு” என்று கூட்டத்திற்குப் பிறகு அசோக் கெலாட் கூறினார்.

ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பாரா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் என்று அசோக் கெலாட் கூறினார். ராஜஸ்தானில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கான சோனியா காந்தியிடம் நான் வருத்தம் தெரிவித்தேன், என்றும் அசோக் கெலாட் கூறினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்குள் எழுந்துள்ள உள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். கட்சிக்கு உள் ஒழுக்கம் உள்ளது, இது "லோக்சபா எண்ணிக்கையில் சரிவைத் தக்கவைக்க" உதவியது என்றும் அது ஒரு தேசியக் கட்சியாகத் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். சோனியாஜி தலைமையில் கட்சியில் ஒழுக்கம் உள்ளது என்றும் அசோக் கெலாட் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் தலைமையால் கூட்டப்பட்ட காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சி.எல்.பி) கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு, சட்டமன்றத் தலைவர் சி.பி. ஜோஷியிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். முதல்வர் தரப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், சச்சின் பைலட் முகாமில் உள்ளவர்கள் இந்த மோதல் குறித்து இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. அசோக் கெலாட்டின் விசுவாசிகளான சாந்தி தரிவால், மகேஷ் ஜோஷி மற்றும் தர்மேந்திர ரத்தோர் ஆகியோருக்கு காங்கிரஸ் செவ்வாயன்று ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வெள்ளிக்கிழமை என்பதால், கட்சித் தலைவர் தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்று அனைவரும் யூகித்துள்ள அரசியல் குழப்பத்தைத் தீர்க்க காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் கதைக்கு புதிய திருப்பமாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் உறுதிப்படுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment