முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மே 13-ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால் சந்திக்கச் சென்றபோது, கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஸ்வாதி பரபரப்பு குற்றஞ்சாட்டினார். மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அது டெல்லியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கட்சியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கெஜ்ரிவால் உதவியாளர் குமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஸ்வாதி மாலிவால், கட்சியில் இருந்து விலக மாட்டேன், ஆம் ஆத்மி கட்சி 2-3 பேருக்கு சொந்தமானது அல்ல. கட்சித் தலைமையிடன் மீண்டும் நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறினார்.
ஸ்வாதி மாலிவால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், “நான் உண்மையைப் பேசவில்லை என்றால், ஒருவேளை (அவருக்கும் கட்சிக்கும் இடையிலான உறவை சரி செய்திருக்கலாம்)… மிகவும் மோசமாக தாக்கப்பட்டாலும், நான் என்னை சரி செய்து கொள்ள முயற்சித்தேன். ஏனெனில் நாட்டில் பெரிய தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது, இந்தப் பிரச்சினை அரசியலாக்கப்படும் என்று எனக்குத் தெரியும்.
எனக்கு அது புரிகிறது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சித்தேன், ஆனால் எனக்கு வேறு வழியில்லை... அவர்கள் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பெண்கள் இயக்கத்திற்கும் தீங்கு விளைவித்துள்ளனர். இண்டு மூன்று பேருக்கு மட்டும் கட்சி சொந்தமில்லை என்பதால் கட்சியிலேயே தொடருவேன். கட்சிகாக என் வியர்வையையும் இரத்தத்தையும் கொடுத்துள்ளேன்” என்றார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மூன்று நாட்களுக்குப் பிறகு நான் காவல்நிலையத்தில் முறையாக புகார் அளித்தேன். அப்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் என்னிடம் "நீங்கள் பா.ஜ.கவின் ஏஜென்டு என்று பலமுறை கூறினார்கள். நாங்கள் யாரும் உங்களுடன் நிற்க மாட்டோம்" என்று கூறினார்கள்.
பாஜகவைச் சேர்ந்த யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டீர்களா என்று கேட்டதற்கு, “இல்லை. துணை நிலை ஆளுநர் மட்டுமே அதை செய்தார் ஆனால் அவர் ஒரு அரசியலமைப்பு பதவியில் இருப்பவர். என்ன நடந்தது என்று அவர் என்னிடம் கேட்டார், மேலும் நான் காவல்துறையுடன் தொடர்புகொள்வதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று கேட்டார்.
கெஜ்ரிவால் உங்களைத் தொடர்பு கொண்டு , அவர் பேசி இருந்தால் இந்த விஷயங்கள் வேறுவிதமாகக் கையாண்டிருக்க முடியுமா என்று கேட்டதற்கு, முதல்வர் இதுவரை தன்னை அழைக்கவில்லை என்று கூறினார்.
"அவர்கள் (சூழ்நிலை) வித்தியாசமாக இருந்திருக்கும், குறைந்தபட்சம் என் மனதில், அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று நான் உறுதியாக நம்பியிருப்பேன். நான் இன்னும் (போலீஸ்) புகார் கொடுத்திருப்பேன். அந்த உறவு அப்படியே இருந்திருக்கும், அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய நான் விரும்பினேன். இன்று நான் யாரையும் எதுவும் கூறப்போவதில்லை என்றார்.
அவர் இப்போது போன் செய்து மன்னிப்பு கேட்டாலும், "நான் எனது புகாரை வாபஸ் பெறமாட்டேன்" என்றும் அவர் கூறினார்.
அன்றைய தினம் நீங்கள் ஏன் முதல்வரை சந்திக்கச் சென்றீர்கள் என்று கேட்டதற்கு, அனைத்துத் தலைவர்களும் அவரைச் சென்று சந்தித்துக் கொண்டிருந்தார்கள், நான் அவரை வாழ்த்தி ஆதரவு தெரிவிக்கச் சென்றேன். 2006 முதல் அவருடன் வேலை செய்து வருகிறேன்.
சிறையில் அவர் சந்தித்த இன்னல், துன்பம் பற்றி கேட்டறிவதற்கும் இந்த கட்டத்தில் கட்சிக்கு ஆதரவளிக்க நான் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் பேச வேண்டும் என்று பேச சென்றேன்.
நான் மட்டும் அதை செய்யவில்லை. உண்மையில், நான் அதை செய்யவில்லை என்றால் அது மிகவும் கேள்விக்குரியதாக இருக்கும். கெஜ்ரிவால் வெளியே வந்த போதும் நானும் திகார் சிறைக்கு வெளியே இருந்தேன். ஆனால் அங்கு ஏராளமானோர் இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.
மார்ச் மாதம் தனது அமெரிக்க பயணம், அவர் இல்லாதபோது முதல்வர் கைது செய்யப்பட்டதில் இருந்து கட்சியுடனான உறவுகளை மோசமாக்கியது என்ற ஊகங்களைப் பற்றி அவர் கூறினார். "நான் செல்லும் முன், நான் எங்கள் கட்சி மேலிடத்துடன் இதுகுறித்து பேசினேன்... ஒரு முன்னோக்கிச் செல்ல வேண்டியிருந்தது... அவர் நான் செல்வது சரியில்லை என்று நான் ஒருபோதும் உணரவில்லை... அவர் அப்படி உணர்ந்திருக்கலாம், அவர் அதை என்னிடம் தெரிவிக்கவில்லை," என்று அவர் கூறினார். கூறினார்.
“எனது ராஜ்யசபா பதவியைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள் என்பது ஒரு கோட்பாடு. நீங்கள் என்னிடம் இதை முறையாக கேட்கலாம். நீங்கள் அதைத் திரும்பப் பெற விரும்பினால், எந்த காரணத்திற்காகவும், அதைக் கேளுங்கள்” என்று அவர் கூறினார்.
குமார் உங்களை தாக்கியதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, என்னிடம் சில "கோட்பாடுகள்" உள்ளது, ஆனால் இந்த அம்சம் குறித்து காவல்துறையிடம் மட்டுமே பேசுவேன் என்று அவர் கூறினார். "மற்றவர்கள் அதைத் திட்டமிடும் வரை அல்லது யாரோ ஒருவருக்கு எதிராக ஏதாவது சீர்குலைக்கும் வரை இந்த மோசமான செயல் நடக்காது," என்று அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/delhi/swati-maliwal-speaks-wont-resign-from-party-aap-does-not-belong-to-2-3-people-9353795/
குமாரை எனக்கு "சாதாரணமாக" எனக்குத் தெரியும். அவர்கள் "உண்மையில் ஒன்றாக வேலை செய்ததில்லை" என்றும் அவர் கூறினார்.
குமார் எப்போதும் மனிஷ் சிசோடியாவின் உதவியாராக பணிபுரிந்தார், நான் எப்போதும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பணிபுரிந்தேன்," என்று அவர் கூறினார். நீங்கள் குமாரை கோபப்படுத்தினால், முதல்வரை சந்திக்க முடியாது என்று கட்சிக்குள்ளே பலர் கூறியுள்ளது எனக்குத் தெரியும் என்றார்.
அந்த நேரத்தில் முதல்வர் வீட்டில் இருந்தார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு, அவர் உள்ளே இல்லாவிட்டால் பாதுகாவலர் என்னை உள்ளே அனுமதித்திருக்க மாட்டார் என்று கூறினார்.
“இந்த சம்பவர் அவர் வீட்டில் நடந்திருக்கிறது, என்னால் எதுவும் சொல்லாமல் இருக்க முடியாது... நான் அங்கு கத்திக் கொண்டிருந்தேன், அவருக்கு அது கேட்க முடியவில்லையா? போலீஸ் வந்ததும், ஒரு பெண் எம்.பி.யை ஏன் உங்கள் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்கிறீர்கள் என்று நீங்கள் வெளியே வந்து கேட்க மாட்டீர்களா?
நான் நடத்தப்பட்ட விதம் மற்றும் நான் எப்படி அவமானப்படுத்தப்பட்டேன், அது மிகவும் கீழ்தனமாக உள்ளது, மேல் இட உத்தரவு இல்லாமல் இது நடக்காது. இது ஒரு திட்டமிட்ட செயல் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.