ஐடி,பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி’ புரிவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்தது.
"கொரோனா பெருந்தொற்று காரணமாக இதர சேவை வழங்குநர்கள், வீட்டிலிருந்து 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பணி’ புரிவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கப்படுகிறது " என்று தொலைதொடர்புத் துறை தனது ட்வீட்டர் கணக்கில் தெரிவித்தது.
தற்போது, ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் 85 சதவீதம் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். மேலும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்பவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
முன்னதாக, கடந்த ஏப்ரல் 28ம் தேதி, ‘வீட்டிலிருந்து பணி’ புரிவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 ம் தேதியில் இருந்து ஜூலை 31ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டிப்பதாக அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 11.55 லட்சத்தை தாண்டியது. நேற்று, வரை கொரோனா தொடர்பான உயிரிழப்பு 28,084-ஐத் தாண்டியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil