World Photography Day 2019 : இன்று உலக புகைப்பட தினம்... உலகில் புகைப்படங்கள் பேசும் நிதர்சனங்கள் போன்று வேறு எந்த பொருளும் உண்மையையும் நிதர்சனங்களையும் பேசுவதில்லை. பல நாடுகளில் ஏற்பட்ட கொடூரமான போர்கள் புகைப்படங்கள் வாயிலாக முடிவுக்கு வந்துள்ளன. எங்கும் காணாத அதிசயங்களை கண் முன்னே கொண்டு வந்து பரவசத்தை உருவாக்கிடும் ஒரு நிலையை புகைப்படங்களால் மட்டுமே நமக்கு தர இயலும்.
வன உயிரியல் புகைப்படக் கலைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகின் புகழ்பெற்ற வன உயிரியல் புகைப்படக் கலைஞர்களின் சிறப்பு மிக்க புகைப்படங்களையும் அவர்கள் குறித்த ஒரு அறிமுகத்தையும் தருவதில் நாங்களும் பெருமை அடைகின்றோம்.
வருண் ஆதித்யா
கோவையை சேர்ந்த இவர், நேசனல் ஜியாகிராஃபியின் யுவர் ஷாட்டில் முதல் பரிசினை 2016ம் ஆண்டு பெற்றுள்ளார். கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் வன உயிரினங்களை புகைப்படம் எடுத்து வருகின்றார். அவர் எடுத்த சில புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் சிலிரிப்பினை உருவாக்கும். அதற்கு நாங்கள் கியாரண்ட்டி.
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் : https://www.instagram.com/varun.aditya/
ராதிகா ராமசாமி
தேனியை பூர்வீகமாக கொண்ட இவரும் வன உயிரியல் புகைப்பட கலைஞர் தான். தேனி ஸ்ரீவரத வேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். வன விலங்குகளை இவர் அதிகமாக புகைப்படம் எடுத்தாலும் இவருடைய ஈடுபாடுகள் முழுக்க முழுக்க பறவையினங்கள் குறித்ததாக இருக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பறவைகள் குறித்து இவர் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எப்போதும் வேற லெவல் தான்.
இவருடைய முக நூல் பக்கத்தில் இவரை பின் தொடர : ராதிகா ராமசாமி முகநூல் பக்கம்
ஜெஸ்வின் கிங்ஸ்லி
மத்திய பிரதேசத்தின் கானா வன உயிரியல் பூங்காவில் புகைப்பட கலைஞராகவும், நேச்சுரலிஸ்ட்டாகவும் இருக்கின்றார் ஜெஸ்வின் கிங்க்ஸ்லி. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இவரின் ஆர்வம் முழுக்க முழுக்க ஊர்வன குறித்ததாக இருக்கின்றது. குறிப்பாக பட்டாம்பூச்சிகளை புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். மேலும் படிக்க : வனவிலங்குகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில் காடுகள் பெரிதாக இல்லை – வைரல் புகைப்படம் குறித்து அதன் போட்டோகிராஃபர்…
ஜெஸ்வின் கிங்க்ஸ்லியை அவருடைய இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய : ஜெஸ்வின் கிங்ஸ்லி
சுதிர் சிவராம்
கர்நாடக மாநிலத்தின் ஹஸ்ஸன் மாவட்டத்தில் பிறந்தவர் சுதிர் ஷிவராம். முழுக்க முழுக்க வன உயிரினங்கள் குறித்த ஆய்வு மற்றும் புகைப்படங்களை எடுத்தலில் ஈடுபட்டு வரும் இவர், பகுதி நேர வகுப்புகளை எடுத்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு புலிகள் குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் அதிகம் வியப்பில் ஆழ்த்தியவை. இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.