Advertisment

எலன் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பதவி கொடுத்த டிரம்ப்..

பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் மற்றும் இந்தியா வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகிய இருவருக்கும் புதிய பதவியை டிரம்ப் தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trumph ,elon musk, america

எலன் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பதவி அறிவிப்பு

அமெரிக்காவின் புதிய அரசாங்கத் திறன் துறையை வழிநடத்த நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் குறித்த தகவலை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் இணைந்து  அரசின் திறன் துறையை வழிநடத்துவார்கள் என கூறியிருந்தார்.  

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்:

Donald Trump nominates Elon Musk, Vivek Ramaswamy to lead America’s new efficiency department

பில்லியனர் தொழிலதிபர் எலன் மஸ்க் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளரான விவேக் ராமசுவாமி ஆகியோர் புதிய அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள், அதே நேரத்தில் பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று  டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.  

இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிறப்பான அரசை வழிநடத்தவும், தேவையற்ற விதிமுறைகளை அகற்றவும், வீண் செலவுகளைக் குறைக்கவும், 'சேவ் அமெரிக்கா' திட்டத்திற்கு தேவையான நிறுவனங்களை மறுசீரமைக்க பணிபுரிவார்கள் என்றும்  அறிவித்துள்ளார்.

எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரும் இணைந்து அரசின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப் ஆட்சி நிர்வாகத்தில் பணியாற்றப்போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை விவேக் ராமசாமி பெற்றுள்ளார். மஸ்க் மற்றும் ராமசாமி ஆகியோர் "அரசு அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் எனது நிர்வாகம் வழி வகுக்கும்" என்று டிரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது முடிவை விரிவாக்கக் கூறிய டிரம்ப், அதிக செயல்திறனுடனும், குறைந்த அதிகாரத்துவத்துடனும் ஒரு சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு விழாவில் அமெரிக்காவுக்கு மிகச் சிறந்த பரிசாக இருக்கும் என்றும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்புவதாக கூறினார். 

தேர்தலுக்கு முன், மத்திய பட்ஜெட்டில் இருந்து 2 டிரில்லியன் டாலர்களை டிரம்ப் குறைக்க உதவுவதாக மஸ்க் கூறியிருந்தார் . ட்ரம்பின் 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் மஸ்க் முக்கிய பங்கு வகித்தார், அதே நேரத்தில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ராமசாமி, போட்டியிலிருந்து வெளியேறும் போது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஆதரித்தார். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India world
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment