scorecardresearch

ம.பி-யை பாதிக்கும் கர்நாடக தோல்வி: உள்கட்சி சிக்கல், மக்கள் அதிருப்தி; பா.ஜ.க தலைவர்கள் கவலை

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க-வின் தோல்வி, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாக கூட்டத்தில் வெளிப்பட்டது. மத்திய பிரதேச பாஜக கட்சிக்குளே சில உள்கட்சி பிரச்சனைகள் இருப்பதை அதன் தலைவர்கள் வெளிப்படுத்தினர்.

உள்கட்சி சிக்கல், மக்கள் அதிருப்தி குறித்து பாஜக தலைவர்கள் கவலை
உள்கட்சி சிக்கல், மக்கள் அதிருப்தி குறித்து பாஜக தலைவர்கள் கவலை

கர்நாடக தேர்தலில் பாஜகவின் தோல்வி, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாக கூட்டத்தில் வெளிப்பட்டது. மத்திய பிரதேச பாஜக கட்சிக்குளே சில உள்கட்சி பிரச்சனைகள் இருப்பதை அதன் தலைவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மத்திய பிரதேச தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் போபாலில் பாஜக நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய பிரதேச பாஜக தலைவர் வி.டி ஷர்மாவிற்கும் மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில் இதை முதலில் சரிபடுத்த வேண்டும் என்று கட்சியின் முத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வேறுபாடுகளுக்கு தீர்வை கண்டுபிடித்து சரி செய்யாமல், இருந்தால், கர்நாடகாவில் ஏற்பட்டதுபோல், மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் மூத்த தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில், 4 வது முறையாக சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக நீடித்தாலும், அவரது தலைமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. பாஜக ஆட்சி செய்த மாநிலத்திலேயே அதிக வருடங்கள் முதல்வராக இருந்தவர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தற்போது உள்ள உயர்மட்ட தலைவர்களை மாற்றுவதற்கான நேரம் கட்சியிடம் இல்லை என்று நிர்வாக கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், இருக்கும் தலைவர்களை வைத்துதான் வெற்றிக்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள, அதிருப்திய்யை போக்குவதற்கு, அவரது ஆட்சியில் பிரபலமாக இருக்கும் நலத்திட்டங்களை குறிப்பிட்டு பேச வேண்டும் என்ற கருத்தும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சிவராஜ் சவுகான் ஆட்சியில் தலித்துகள் வழிபடும் சான்ட் ரவிதாஸ்  கோவிலுக்கு 100 கோடி ஒதுக்கியது. இந்து மதம் தொடர்பான பாடங்களை பள்ளியின் பாடத்திட்டத்தில் சேர்த்தது. ஓர்ச்சா மற்றும் சித்திரகூடத்தில் கோவில் தாழ்வாரங்களை கட்டியது என்று பல்வேறு விஷயங்கள் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆட்சியில் செய்யப்பட்டிருந்தாலும், இந்துத்துவ கோட்பாடுகளை வைத்து பாஜக-வால் மத்திய பிரதேசத்தில் வெல்ல முடியாது . காங்கிரஸ் கட்சியின் கமல் நாத்தும் இந்து மதக் கோட்பாடுகளை வைத்து பிரச்சாரம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக மத்திய பிரதேசத்தின் 90% மக்கள் தொகை இந்து மத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் பெண்களை கவரும் திட்டங்களில் பாஜக கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. கூடுதலாக சாதி வாரியாக பிரிந்து இருக்கும் அரசியலை சரியாக கையாளாததால், 2018-ல் பாஜக தோல்வியடைந்ததாக கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர். மேலும் கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் 2018ல் பாஜக அரசின் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துதான் பாஜக ஆட்சியமைத்தது.  இதுவும் பாஜகவின் தோல்விக்கு மீண்டும் காரணமாக அமையலாம் என்று நிர்வாக கூட்டத்தில் பேசப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Worries over internal rift at mp bjp meeting leaders told to pull up socks