/tamil-ie/media/media_files/uploads/2022/02/khali-joins-bjp.jpeg)
Dalip Singh Rana, known as The Great Khali, joins BJP: தி கிரேட் காளி என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.
ராஜ்யசபா எம்பி அருண் சிங், இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மக்களவை எம்பி சுனிதா துக்கல் முன்னிலையில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார்.
“பாஜகவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்... பிரதமர் நரேந்திர மோடியின் தேசத்திற்கான பணி அவரை சரியான பிரதமராக மாற்றுகிறது என்று நினைக்கிறேன். எனவே, தேசத்தின் வளர்ச்சிக்காக அவருடைய ஆட்சியின் ஒரு பகுதியாக ஏன் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். பாஜகவின் தேசியக் கொள்கையின் தாக்கத்தால் நான் கட்சியில் சேர்ந்தேன்” என்று ராணா கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ராணா WWE யுனிவர்ஸில் நன்கு அறியப்பட்டவர், அங்கு அவர் பாடிஸ்டா, ஷான் மைக்கேல்ஸ் மற்றும் ஜான் செனா மற்றும் கேன் போன்ற தொழில்முறை மல்யுத்த வீரர்களுடன் சண்டையிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டின் WWE ஹால் ஆஃப் ஃபேம் வகுப்பில் அவர் சேர்க்கப்பட்டார். 7-அடி-1 இஞ்ச் உயரத்தில் நிற்கும் மல்யுத்த வீரர் ராணா, "MacGruber," "Get Smart" மற்றும் "The Longest Yard" போன்ற படங்களில் தோன்றியுள்ளார். அவர் ஒரு மல்யுத்தப் பள்ளியைத் திறந்து, அடுத்த தலைமுறை இந்திய சூப்பர் ஸ்டார் நம்பிக்கையாளர்களை போட்டிகளுக்கு தயார்படுத்த உதவி வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தலுக்கு கட்சி தயாராகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.