இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் பிரிஜ் பூஷண் சிங் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஹர்ஜித் சிங் ஜாஸ்பால், பிரிஜ் பூஷண் சிங்குக்கு ரூ.25 ஆயிரம் பத்திரம் தாக்கல செய்ய உத்தரவிட்டு இடைக்கால முன்ஜாமின் வழங்கினார்.
இந்த வழக்கில் பிணை மீதான விசாரணை ஜூலை 20ஆம் தேதி முதல் விசாரணைக்கு வருகிறது. பிரிஜ் பூஷண் சிங் மீது 6 பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் 1500 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பிரிஜ் பூஷண் சிங் எந்நேரமும் விசாரிக்கப்படலாம். இந்த நிலையில் அவர் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பிரிஜ் பூஷண் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354ஏ, 354டி, 506 மற்றும் 109 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார் அளித்த 6 மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர் மைனர் ஆவார். அவர்கள் தொடுதல், மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட செய்கைகளில் பிரிஜ் சிங் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“