ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி மாநிலத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காங்கிரசில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
இந்நிலையில், எதிர் வரும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்தனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் பவன் கேரா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.
“அவர்கள் இன்று கட்சியில் இணைவார்கள். இருவரும் போட்டியிடுவார்களா இல்லையா என்பது விரைவில் தெரியவரும் என கட்சி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் கட்சியில் சேருவார்கள் என்றும், பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்திற்குச் சென்று ஊடகங்களுக்கு விளக்கமளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை, இருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தனர். அவர்கள் இருவரும் போட்டியிடுவதா, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்களா என்பது குறித்து காங்கிரஸ் உயர்மட்டத் தலைமைக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா அல்லது தாத்ரி விதான் சபாவில் போட்டியிடுவார் என்றும், மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பட்லி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹரியானாவில் கூட்டணி தொடர்பாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. “இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைமைக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் முடிவு எடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
ரயில்வே பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத்
இதனிடையே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
भारतीय रेलवे की सेवा मेरे जीवन का एक यादगार और गौरवपूर्ण समय रहा है।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) September 6, 2024
जीवन के इस मोड़ पर मैंने स्वयं को रेलवे सेवा से पृथक करने का निर्णय लेते हुए अपना त्यागपत्र भारतीय रेलवे के सक्षम अधिकारियों को सौप दिया है। राष्ट्र की सेवा में रेलवे द्वारा मुझे दिये गये इस अवसर के लिए मैं… pic.twitter.com/HasXLH5vBP
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக, வினேஷ் போகத் இந்தியா திரும்பியதிலிருந்து, அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் காணப்பட்டார். அவரை வரவேற்க ரோஹ்தக் எம்.பி தீபேந்தர் ஹூடா டெல்லியில் உள்ள ஐ.ஜி.ஐ விமான நிலையத்திற்கு நேரில் சென்றார். அவர் வெற்றியின் சின்னமான ஹனுமான் கடவுடன் வரவேற்றார். இதேபோல், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், பா.ஜ.க தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் மேற்கொண்டபோது, எம்.பி தீபேந்தர் ஹூடா தனது ஆதரவை தெரிவித்தார்.
முன்னாள் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் மிக முக்கியமான முகங்களில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் அடங்குவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.