நிறைய இந்தியப் படங்கள் சீனாவில் ரிலீஸாக வேண்டும் - சீன அதிபர் வேண்டுகோள்

அமீர்கான் நடித்த 'தங்கல்' படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன்

டோக்லாம் எல்லையில் சீனப்படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் நீடித்த மோதல் காரணமாக இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த இடைவெளியை சரி செய்யும் விதமாக, சீன அதிபரின் அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் மோடி சீனாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வுஹான் நகரில் இன்று நடைபெற்ற 2ம் நாள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது டோக்லாம் எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், நிறைய பாலிவுட் படங்களை சீனாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என சீன அதிபர் பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், “பாலிவுட் திரைப்படங்கள் இன்னும் அதிகளவு சீனாவில் வெளியிடப்பட வேண்டும் என தனது விருப்பத்தினை நமது பிரதமரிடம் சீன அதிபர் வெளிப்படுத்தியுள்ளார். இது உண்மையில் நல்ல விஷயம் தான். இந்தியப் படங்கள் சீனாவில் அதிகளவு வெளியாக வேண்டும் என்றும், அதேபோல், சீன படங்கள் இந்தியாவில் அதிகளவு வெளியாக வேண்டும் என்று கூறியிருப்பது நல்ல யோசனையே. அவர் நிறைய பாலிவுட் படங்களையும், மற்ற இந்திய மொழி படங்களையும் பார்த்திருப்பதாக கூறினார். குறிப்பாக, அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தை அவர் மிகவும் ரசித்துப் பார்த்ததாக கூறினார்.” இவ்வாறு விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 1982ல் வெளியான ‘Yeh Vaada Raha’ எனும் பாலிவுட் படத்தில் உள்ள ‘Tu, tu hai wahi dil ne jise apna kaha,’ எனும் பாடலை, சீன கலைஞர்கள் கருவியில் இசைக்க, அதனை இருநாட்டு தலைவர்களும் கேட்டு ரசித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close