congress | andhra-pradesh | ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காங்கிரஸில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜன.16,2024) வெளியனது. ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா, ஜனவரி 4ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா ரெட்டி ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஷர்மிளா, காங்கிரஸுடன் தனது கட்சியை இணைப்பதாக அறிவித்தார். அப்போது, “தனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றுவேன்” என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸைப் பாராட்டிய அவர், “இது நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி” என்றார். இன்று, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி இன்று முதல் இந்திய தேசிய காங்கிரஸில் அங்கம் வகிக்கப் போவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி இனி காங்கிரஸிலிருந்து பிரிந்து இருக்கப் போவதில்லை என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Y S Sharmila appointed new Congress president of Andhra Pradesh unit
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“