பணத் திருட்டை மறைப்பதற்காக ஏ.டி.எம் இயந்திரத்திற்கு தீ வைத்த தனியார் ஒப்பந்த ஊழியர்களின் நாடகத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர்.
ஏனாம் ஏ.டி.எம் மிஷினில் ஏற்பட்ட தீ விபத்து அல்ல ஏ.டி.எம்.மில் பலமுறை கொள்ளையடித்ததை மறைப்பதற்காக குற்றவாளிகளே ஏ.டி.எம் மிஷினில் தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏனாம் இன்ஸ்பெக்டர் ஆடலரசன், எஸ்ஐ புனித் ராஜ், கட்டா சுப்பராஜ் ஆகியோர் கூறியதாவது:
கடந்த ஜூலை மாதம் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட தீ விபத்து, விபத்து அல்ல, இது ஒரு ஒப்பந்த நிறுவனத்தின் பணத்தை டெபாசிட் செய்யும் தொழிலாளர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டம்.
நஹாபட்டுலா வெங்கடேஷ் என்ற பிட்டு, வனமுரு அனில்பாபு ஆகியோர் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்து தவணை முறையில் ரூ.12 லட்சத்தை திருடினர். இந்த செயலை வெளியில் தெரியாமல் இருப்பதற்காக அவர்களே ஒன்று கூடி
போலீஸ கவனயத்தை திருப்புவதற்காக அவர்கள் ஏ.டி.எம்.மில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ மூட்டத்தின் போது பிட்டு என்பவர் காயமடைந்தார்.
திருடப்பட்ட பணத்தில் வாங்கிய காரில் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அங்கிருந்து சிசிடிவி கேமராவை பார்த்து குற்றவாளிகளை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.
அவர்களும் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி