நாற்காலியை தக்க வைப்பாரா எடியூரப்பா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!!

பரப்பரப்பான அரசியல் சூழலுக்கு இடையில். கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பே எடியூரப்பாவின்  பதவி காலத்தை தீர்மானிக்க இருக்கிறது.

எடியூரப்பாவின் பதவியேற்பை  ஏற்க முடியாது என்று காங்கிரஸ் மற்றும் மஜத தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று(19.5.18) மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  தற்காலிக சபாநாயகர் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வாக்கெடுப்பு முறை குறித்து தற்காலிக சபாநாயகர் தீர்மானிப்பார் என்று நீதிபதி சிக்ரி கூறினார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கர்நாடகாவில்  சட்டப்பேரவை கூட்டப்படுகிறது. இதில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமனம் செய்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றபின், மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும்.  எடியூரப்பாவின் பதவிக் காலத்தை இந்த நம்பிக்கை வாக்கெடுப்பே முடிவு செய்ய உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் பதற்றமான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close