கர்நாடகாவில் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும் முயற்சியில் பாஜக தனது வேட்பாளர் பட்டியலில் புதிய முகங்களை களமிறக்கியுள்ளது.
எனினும், செவ்வாய்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட 189 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலைப் பார்த்தால், ஆளுங்கட்சியானது சிட்டிங் எம்.எல்.ஏ அல்லது அவர்களின் உறவினர்களையும் கைவிடவில்லை.
அதாவது, முதல் பட்டியலில், 52 புதிய முகங்கள் இருந்தபோதிலும், 96 எம்எல்ஏக்கள் அல்லது அவர்களது உறவினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
96 தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் அல்லது அவர்களது உறவினர்களில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியிலிருந்து விலகி, 2019 இல் காங்கிரஸ்-ஜேடி(எஸ்) கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் ஆவார்கள்.
புதிய முகங்களுக்காக ஒன்பது தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜெகதீஷ் ஷெட்டர், கே.எஸ்.ஈஸ்வரப்பா, எஸ்.ஏ.ராம்தாஸ், எம்.பி.குமாரசாமி, நேரு ஓலேகார், மடல் விருபக்ஷப்பா உள்ளிட்டோர் ஆவார்கள்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். கட்சி முதல் பட்டியலில் மொத்தம் எட்டு பெண்களின் பெயரைக் கொண்டுள்ளது. காங்கிரஸின் முதல் பட்டியலில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை விட இது இரண்டு அதிகம்.
முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு பாஜக எந்த இடமும் வழங்கவில்லை, காங்கிரஸ் இதுவரை முறையே 11 மற்றும் 2 இடங்களை வழங்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டைப் போலவே, பாஜக தனது முதல் பட்டியலில் பெரும்பான்மையான டிக்கெட்டுகளை லிங்காயத் சமூகத்துக்கு வழங்கியுள்ளது. கட்சிக்கு சாதி ஆதரவின் அரணாக இருக்கும் லிங்காயத் சமூகத்திற்கு 51 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டில், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பிஎஸ் எடியூரப்பாவின் தலைமையில் கட்சி செயல்பட்டபோது லிங்காயத்துகளுக்கு 55 இடங்கள் வழங்கப்பட்டன.
இம்முறையும் எடியூரப்பா மகன் உள்பட அவரது தீவிர ஆதரவாளர்கள் 12 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பட்டியல்களில் 166 வேட்பாளர்களை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், இதுவரை 42 லிங்காயத்துகளுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது.
கட்சி 2018 இல் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்திற்கு 43 டிக்கெட்டுகளை வழங்கியது. இரண்டாவது சமூகமான வொக்கலிக்காவுக்கு பாஜக 41 இடங்களும் காங்கிரஸ் 33 இடங்களும் வழங்கியுள்ளன.
புதன்கிழமை காலை, எடியூரப்பா முதல் பட்டியலில் தனது ஆதரவுக் குழுவிற்கு இடம் அளித்ததற்காக ஆதரவாளர்களால் பாராட்டப்பட்டார். எடியூரப்பா கட்சியில் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக பேரம் பேசி வந்தார், மேலும் அவர் சீட் பங்கீட்டில் அதிருப்தியில் இருப்பதாக முன்னதாக ஊகங்கள் இருந்தன.
30 எம்.எல்.ஏ.க்கள் தோல்வியடைவார்கள் என்று மற்றவர்கள் பரிந்துரைத்தாலும், சிட்டிங் எம்.எல்.ஏக்களில் ஐந்து முதல் ஆறு பேர் மட்டுமே தங்கள் இடங்களை இழப்பார்கள் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
முன்னதாக எடியூரப்பா டெல்லியில் இருந்து திரும்பும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் அளித்த அனைத்து ஆலோசனைகளும் ஏற்கப்பட்டுள்ளன. தொகுதித் தேர்வின் அடிப்படையில் நாங்கள் முழுப்பெரும்பான்மை பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறினார்.
எடியூரப்பா ஆதரவாளர்களில் சித்து சவடி, சுரேஷ் கவுடா, எம்பி ரேணுகாச்சார்யா, தம்மேஷ் கவுடா, சி கே ராமமூர்த்தி, பிபி ஹரிஷ் மற்றும் சப்தகிரி கவுடா ஆகியோர் சீட்டு பெற்றுள்ளதாக பாஜக உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4 ஆண்டுகளாக அந்தந்தப் பகுதிகளில் தங்களுடைய இடங்களை உறுதிப்படுத்த பாஜக தனது சிட்டிங் எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு பெரும் தொகையை வாரி இறைத்துள்ளது.
பாஜக சீட்டு வழங்கப்பட்டுள்ள 14 முன்னாள் காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) எம்எல்ஏக்களுக்கு முக்கிய இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரியில், பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், மாநிலத்தில் கட்சித் தொகுதிகளின் வளர்ச்சிக்காக பாஜக அரசு ரூ.1000 கோடி நிதி வழங்கியதாகக் கூறினார்.
“அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளை கட்சியுடன் இணைத்தால், தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்ற கேள்விக்கே இடமில்லை. எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது” என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
“அரசு திட்டங்களின் பயனாளிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது, அவர்களை கட்சியுடன் இணைக்க நாங்கள் தரவுகளில் பணியாற்ற வேண்டும். அவர்கள் பெற்ற பலன்களை அவர்களுக்கு நினைவூட்டினால் அதுவே போதும் நாம் வெற்றிபெற,” என்றார்.
“இந்த முறை ஒரு புதுமையைக் கொண்டுவரும் நோக்கம் இருக்கிறது. கீழ் மட்டத்தில் இருந்து நிறைய விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் பட்டியலில் பா.ஜ., வெற்றி பெறும் என்பது தெளிவாக தெரிகிறது.
காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் தங்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது, அதை ஒப்பிட்டுப் பார்த்தால், 189 முதல் பட்டியலில் இருந்தே பாஜக பெரும்பான்மையை வெல்லும் என்பதை பார்க்கலாம்” என்று கர்நாடக முதல்வர் பொம்மை கூறினார்.
மேலும், “மாற்றப்படுபவர்களில் பலரிடமும் பேசப்பட்டு என்ன காரணங்கள், என்ன நடவடிக்கை எடுக்கப்படும். சூழ்நிலைகள் தேவைப்படும்போது நாங்கள் மக்களுக்குச் சொல்கிறோம், ”என்று பொம்மை கூறினார்.
இதற்கிடையில், மூத்த எம்.எல்.ஏ.க்கள் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் கே.எஸ். ஈஸ்வரப்பா, மற்றும் எம்.எல்.சி.க்கள் லக்ஷ்மண் சவடி மற்றும் ஆர்.சங்கர் ஆகியோரைப் போல தாங்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் அல்லது விடப்படுவார்கள் என்று குறைந்தது மூன்று பாஜக தலைவர்களிடமிருந்து கிளர்ச்சிக்கான அறிகுறிகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“