Yes Bank Crisis Yes bank grant suspicious loans : யெஸ் வங்கியின் முன்னாள் இயக்குநர் மற்றும் சி.இ.ஒ மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பண மோசடி மற்றும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அளிக்கப்பட்ட வங்கிக் கடன்கள் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை பெறப்பட்ட தரவுகளின் படி பார்த்தால் 44 நிறுவனங்களுக்கு இந்த வங்கி ரூ. 34 ஆயிரம் கோடி வரை கடன் அளித்துள்ளாது. அதில் அனில் அம்பானியின் என்.பி.ஏ. கீழ் இயங்கும் 9 நிறுவனங்கள் ரூ. 12,800 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் க்ரூபின் கீழ் இயங்கும் 16 நிறுவனங்களுக்கு ரூ. 8,400 கோடி வரையில் வங்கிக் கடன் அளிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
To read this article in English
DHLF நிறுவனத்திற்கு கீழே இயங்கும் தேவன் ஹவுஸிங் ஃபினான்ஸ் கார்ப்பரேசன் மற்றும் பிலிஃப் ரியல்ட்டர்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனங்களுக்கு ரூ. 4,735 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளது. ஐ.எல். அண்ட் எஃப்.எஸ் நிறுவனத்திற்கு ரூ. 2,500 கோடியையும், ஜெட் ஏர்வேஸூக்கு ரூ. 1,100 கோடியையும் கடனாக அளித்துள்ளது.
கெர்கர் க்ரூப்பின் காக்ஸ் அண்ட் கிங்க்ஸ் மற்றும் கோர் ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடியை கடனாக கொடுத்துள்ளாது. பாரத் இன்ஃரா, மெக்லியோட் ரஸ்ஸல் அசாம் டீ, எவெரெடி ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 1250 கோடியும், ஓம்கார் ரியல்ட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸின் இரண்டு திட்டங்களுக்கு ரூ. 2,710 கோடி கடனும், ரேடியஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1,200 கோடியும், சி.ஜி. பவர் ஆஃப் தாப்பர் நிறுவனத்திற்கு ரூ. 500 கோடியும் கடனாக வழங்கியுள்ளது இந்நிறுவனம்.
To read this article in English
ரியல் எஸ்டேட்ஸ், கட்டுமானம் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இவ்வங்கி அளிக்கப்பட்டிருக்கும் கடன், இந்த வங்கியின் அழுத்ததிற்கு காரணமாக அமைந்திருக்கும் என்பதற்கு இப்பட்டியலே உதாரணம். கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்கு முன்பு இந்த வங்கி கொடுத்த கடன்களின் மூலமாகவே இவ்வங்கி இந்நிலையை அடைந்துள்ளது. ஆர்.பி.ஐயின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது.
இந்த நிறுவனங்கள் மக்கள் மத்தியில் செயல்பட்டு வந்தாலும் இந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவதில் எனக்கு வருத்தம் இல்லை. நான் எந்த வாடிக்கையாளர்களின் தனி உரிமையையும் மீறவில்லை. அனில் அம்பானி குழுமம், எஸ்ஸெல் குழுமம், டி.எச்.எஃப்.எல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் & பினான்சியல் சர்வீசஸ் லிமிட்டட், வோடஃபோன் ஆகியவை இந்த வங்கியில் கடன் வாங்கிய நிறுவனங்கள் ஆகும்.
மேலும் படிக்க : 6 மாதத்தில் ரூ.18,000 கோடி ”வித்ட்ரா”… யெஸ் வங்கி விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
நடைபெறும் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்தது யெஸ் வங்கி. முதலீட்டார்கள் நிதியை பெறுவதில் கால தாமதம் ஆனதால் இந்த முடிவை எடுத்தது அவ்வங்கி. முதன்மையாக ஒரு முறை ஒத்திவைக்கப்பட்ட சொத்து வரி (டிடிஏ) ரூ .709 கோடியை அட்ஜெஸ்ட் செய்ததன் மூலம் நவம்பர் முதல் 2019 ஆம் ஆண்டில், செப்டம்பர் முதல் மூன்று மாதங்களுக்கு வங்கி 600 கோடி ரூபாய் நிகர இழப்பை அறிவித்தது. அதன் மொத்த NPA கள் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ .17,134 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 3,866 கோடியாக இருந்தது. நிகர என்.பி.ஏக்கள் இதே காலகட்டத்தில் ரூ .2,019 கோடியிலிருந்து ரூ .9,757 கோடியாக உயர்ந்தன. சதவீத அடிப்படையில், நிகர NPA கள் Q2 FY19 இல் 0.84 சதவீதத்திலிருந்து Q2 FY20 இல் 4.35 சதவீதமாக உயர்ந்தன.
இந்த காலாண்டில் வங்கி 1,336 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் வங்கியின் மொத்த நிலுவை ரூ .2.24 லட்சம் கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு 6.3 சதவீதம் குறைந்துள்ளது.வங்கியின் மொத்த வைப்புத்தொகை ஆறு சதவீதம் குறைந்து ரூ. 2.09 லட்சம் கோடியாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ரிசர்வ் வங்கி ஒரு புனரமைப்பு திட்டத்தை வெளியிட்டது, இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த யெஸ் பேங்கின் 49 சதவீத பங்கு பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.